சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறையில் இலவச பயிற்சிகள்.

0
667
இலங்கையில், ஆஸ்திரேலிய அரசாங்கமும் இலங்கை அரசாங்கமும் இணைந்து ஸ்கில்ஸ் போர் இங்க்ளுசிவ் வேலைத்திட்டத்தின் கீழ் சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறையில் இலவச பயிற்சிக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. பதினெட்டு வயதிற்கு மேற்பட்ட அனைவரும் இதற்க்கு விண்ணப்பிக்கலாம். முன் அனுபவங்கள் எதுவும் தேவையில்லை, காரணம் பயிற்சிகள் அடிப்படையில் இருந்து வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. மேலும் நீங்கள் ஏற்கனவே சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறையில் தேர்ச்சி பெற்றவராயின் நீங்களும் விண்ணப்பிக்கலாம், உங்கள் திறன்களை மேலும் விருத்தி செய்வதற்கும் நீங்கள் விண்ணப்பிக்கலாம்.

இப்பயிற்சியின் முடிவில் உலகளாவிய ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ்களுடன் சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறையில் தகுந்த தொழில் வாய்ப்பை பெறுவதற்கான வழிகாட்டல்களும் வழங்கப்படும். ஏற்கனவே 4000 பேர் விண்ணப்பித்திருக்கும் நிலையில் மேலும் 2000 பேரை இணைத்துக்கொள்ளலாம். இன்னமும் நீங்கள் விண்ணப்பிக்காதுவிடில் இன்றே விண்ணப்பியுங்கள்.
மேலதிக விபரங்கள் மற்றும் தொடர்புகளுக்கு  0117 21 21 30 , 076 455 0721ஆகிய இலக்கங்களை அணுக முடியும்.
online மூலமாக விண்ணப்பிப்பதற்கு கீழ்காணும் link ஐ அழுத்துங்கள்.  https://goo.gl/forms/rEFLX7VNPFD89Yrg2 மேலதிக விபரங்களுக்கு ஸ்புக் facebook ஊடக இணைந்திருங்கள் fb.me/joinTnH