கல்வியியல் கல்லூரிகளுக்கு மாணவர்களை அனுமதிக்கும் வர்த்தமானி அறிவித்தல்

0
375

2016, 2017ம் ஆண்டுகளுக்குரிய ஜிசிஈ உயர்தர பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் தேசிய கல்வியியல் கல்லூரிகளுக்கு மாணவர்களை அனுமதிப்பது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டுள்ளது.

இதற்குரிய விண்ணப்பங்கள் அடுத்த மாதம் 15ம் திகதி முதல் ஏற்றுக்கொள்ளப்படும் என கல்வியமைச்சு அறிவித்துள்ளது. இரு வருடங்களின் பெறுபேறுகளுக்கு அமைய தலா நான்காயிரம் மாணவர்கள் இணைத்துக் கொள்ளப்படுவார்கள். நாட்டிலுள்ள 19 கல்வியியல் கல்லூரிகளுக்காகவும் எண்ணாயிரம் பேர் ஒரே தடவையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர்.