மட்டக்களப்புமாவட்டத்தில்பூரணகர்த்தால்

0
711
மட்டக்களப்பு மாவட்டத்தில் பூரண கர்த்தால் அனுஸ்டிப்பு படங்கள் இணைப்பு
(டினேஸ்)
கிழக்கு மாகாண ஆளுநர் பதவியினை மாற்றம் செய்யக்கோரி கிழக்கு மக்கள் ஒன்றியத்தின் மூலமாக       கர்த்தால் அழைப்பு விட்டிருந்ததிற்கு அமைய மட்டக்களப்பு அம்பாறை மற்றும் திருமலை ஆகிய மாவட்டங்களில் பூரண கர்த்தால் அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றது.
அதனடிப்படையில் இன்று காலை மட்டக்களப்பு நாவற்குடா பகுதியில் டயர்கள் எரிக்கப்பட்டு போக்குவரத்து ஸ்தம்பிதமடைந்திருந்தது பின்னர் பொலீஸாரின் தலையீட்டால் மீண்டும் போக்குவரத்து வழமை நிலைக்கு நிரும்பியுள்ளதுடன் பெரும்பாலான கடைகள் பூட்டப்பட்டு தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.