உயர் நீதிமன்ற நீதியரசர்களும் மேன்முறையீட்டுநீதியரசரும் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம்

0
137

உயர் நீதிமன்ற நீதியரசர்கள் மூவரும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் ஒருவரும் புதிதாக இன்று (09) முற்பகல் ஜனாதிபதி உத்தியோகபூர்வ இல்லத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் பி.டீ.சூரசேன, மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் எஸ். துரைராஜாஇ மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் ஈ.ஏ.ஜீ.ஆர்.அமரசேகர ஆகியோர் உயர் நீதிமன்ற நீதியரசர்களாக புதிதாக பதவிப்பிரமாணம் செய்துகொண்டதுடன், மேல் நீதிமன்றத்தின் நீதிபதி கே.பி.பெர்ணான்டோ புதிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசராக பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.
ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர்.செனவிரத்னவும் இந்நிகழ்வில் கலந்துகொண்டார்.