ராணமடு பகுதியில் மண் அகழ்வை தடுக்கக்கோரி ஆர்ப்பாட்டம்

0
327

மட்டக்களப்பு போரதீவுப் பற்று பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ராணமடு பகுதியில் விவசாய காணிகளில் மண் அகழ்வு நடைபெறுவதால் தங்களது விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதாக கோரி அப்பகுதி மக்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 

இன்று காலை ராணமடு பகுதியில் ஒன்று கூடிய  மக்கள் தங்களது விவசாயக் காணிகளின் அருகிலும் விவசாயக் காணிகளிலும் மண் அகழ்வுக்கு அனுமதி வழங்கியதால் தங்களது விவசாய நிலங்கள் தோண்டப்பட்டு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு விவசாய செய்கை பாதிக்கப்படுவதால் குறித்த பகுதியில் வழங்கப்பட்ட மண் அகழ்வு அனுமதியை இரத்துச்செய்யுமாறு கோரி மேற்படி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட மக்கள் தெரிவித்தனர்.இது குறித்து அரசாங்க அதிகாரிகளிடம் கேட்டபோது தங்களுக்கு எற்பட்ட அழுத்தம் காரணமாகவே குறித்த பகுதியில் மண் அகழ்வுக்கு அனுமதி வழங்கியதாகவும் அதனை நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் தெரிவித்துள்ளனர்.