பாலர் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு.

0
159

முதலைக்குடா சமுகமேம்பாட்டிற்கான அபிவிருத்தி ஒன்றியத்தினால் பாலர் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் நேற்று(28) வெள்ளிக்கிழமை வழங்கி வைக்கப்பட்டன.

சமுகமேம்பாட்டிற்கான அபிவிருத்தி ஒன்றியத் தலைவர் சி.சிவலிங்கம் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், பாலர் பாடசாலை மாணவர்களுக்கு புத்தகப்பைகள் வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில், மண்முனை தென்மேற்கு பிரதேசசபையின் தவிசாளர் சி.புஸ்பலிங்கம், உதவித்தவிசாளர் பொ.கோபாலபிள்ளை உள்ளிட்டவர்களும் கலந்து கொண்டனர்.