உலக ஆணழகன் போட்டியில் இலங்கைத்தமிழர் வெற்றி

0
756

WBPF அமைப்பின் 10வது உடல்கட்டுமான வல்லுனர் போட்டியில் இலங்கையரான லூசியன் புஷ்பராஜ் வெற்றி பெற்றுள்ளார்.

தாய்லாந்தில் இடம்பெற்ற 10 ஆவது உலக ஆணழகன் மற்றும் உடலமைப்பு விளையாட்டு போட்டியிலேயே லூசியன் இன்று வெற்றி பெற்றுள்ளார். 2014 இலங்கையின் ஆணழகன் பட்டத்தை வென்றதைத் தொடர்ந்து இவர் பல சர்வதேச போட்டிகளில் கலந்து கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது