மட்டக்களப்பில் நேற்றும் பொலிசார் மீது தாக்குதல்

0
315

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவிலுள்ள ஊறணி நவற்கேணி பிரதேசத்தில் விசாரணைக்காக சென்ற பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் மீது நேற்று (15) தாக்குதல் நடத்தியதில் காயமடைந்த நிலையில் பொலிஸார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

சம்பவம் தொடர்பில் இருவரை கைது செய்துள்ளதாகவும் ஒருவர் தலை மறைவாகியுள்ளதாகவும் மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பிரதேசத்தில் சம்பவதினமான நேற்று காலை 10.30 மணிக்கு விசாரணை ஒன்றிற்காக இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் சென்றிருந்தனர். இந்த நிலையில் பொலிஸார் விசாரணையில் ஈடுபட முற்பட்டபோது மூவர் பொலிஸார் மீது தாக்குதல் நடத்தி விட்டு தப்பியோடியுள்ளனர் .

இதில் படுகாயமடைந்த இரு பொலிஸாரும் மட்டு போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் தாக்குதல் நடத்திய அந்த பிரதேசத்தைச் சேர்ந்த 24, 30 வயதுடைய இருவரை கைது செய்ததுடன் ரூபன் என்று அழைக்கப்படும் மற்றவர் தலைமறைவாகியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இச் சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான விசாரணைகளை மட்டு. தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.