கொக்கட்டிச் சோலையில் சாதாரணதர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு ஆசிவேண்டி விசேட பூசை வழிபாடு.

0
592
இம்முறை கல்விப்பொதுத்தராதர சாதாரணதர  பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு இறை ஆசிவேண்டி கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றிஸ்வரர் பேராலயத்தில் விசேட பூசை வழிபாடுகள்  சனிக்கிழமை சிறப்பாக நடைபெற்றன.
மண்முனை தென்மேற்கு பிரதேச இளைஞர் சேவை உத்தியோகத்தர் அ.தயாசீலன், மற்றும் மண்முனை தென் மேற்கு பிரதேச இளைஞர் கழகங்களின் சம்மேளனத்தின் ஏற்பாட்டிலும் நடைபெற்ற இந்த விசேட பூசை வழிபாட்டு நிகழ்வில் சுமார் 800க்கு மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்துகொண்டு வழிபாடுகளில் ஈடுபட்டனர்.
இம் முறை க.பொ.த.சா தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு இறை அருளாசி வேண்டி சனிக்கிழமை   நண்பகல் 12.00 மணியளவில் நடைபெற்ற பூசை வழிபாடுகளின் போது ஸ்ரீ தான்தோன்றிஸ்வரரின் பாதங்களில் வைத்து பூசிக்கப்பட்ட   பேனாக்கள் மாணவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது.
சிவஸ்ரீ மு.கு.சச்சிதானந்த குருக்கள் மற்றும் சிவஸ்ரீ வ.சோதிலிங்க குருக்கள்  ஆகியோர் பூசை நிகழ்வுகளை நிகழ்த்தியமை குறிப்பிடத்தக்கது.