கண்ணீரில் மூழ்கியது பெரியநீலாவணை ! 21 மரியாதை வேட்டுகள் தீர்க்கப்பட்டு தினேஷின் பூதவுடல் நல்லடக்கம்.

0
396

மட்டக்களப்பு வவுணதீவு வலையிரவு காவலரணில் வைத்து 2018-11-29ஆம் அதிகாலை சுட்டுக்கொல்லப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் பெரியநீலாவணையைச் சேர்ந்த கணேஸ் திணேசின் பூதவுடல் பொலிஸ் மரியாதையுடன் இன்று (02)பெரியநீலாவணை மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுணர் ரோஹித பொல்கொல்லாகம,கிழக்கு மாகாண சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர்; சந்திர ஜெயசேகர உள்ளீட்ட பொலிஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.இங்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன,பொலிஸ் மா அதிபர் பூஜித ஜெயசுந்தர ஆகியோரின் இரங்கல் செய்திகளும் வாசிக்கப்பட்டது.