அமைதிக்கு பங்கம் விளைவிக்க முற்பட்டால் மீளவும் இராணுவ முகாம்கள் வீதிகளில் அமைக்கப்படும்

0
493

தற்போது நிலவும் அமைதியான சூழலை எதிர்காலத்திலும் பாதுகாக்கவேண்டும். அமைதிக்கு பங்கம் விளைவிக்க முற்பட்டால் மீளவும் இராணுவ முகாம்கள் வீதிகளில் அமைக்கப்படும் – வீதிச் சோதனை நடவடிக்கைகளையும் இராணுவத்தினர் முன்னெடுப்பர்”

 

இவ்வாறு யாழ்ப்பாண மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.

வட்டுக்கோட்டையில் சீரமைப்புச் செய்யப்பட்ட குளம் ஒன்றை பொதுமக்களுக்கு கையளிக்கும் நிகழ்விலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:

இராணுவத்தினர் மக்களுக்கான வேலைத் திட்டங்களை முன்னெடுப்பதற்கு ஒற்றுமையும் அமைதியுமே அவசியமாக உள்ளது.

எனவே தமிழ் மக்களிடம் நான் வலியுறுத்துக் கேட்டுக்கொள்கின்றேன், அமைதி – ஒற்றுமையுமான நிலமையை எதிர்காலத்திலும் பேணிப் பாதுகாக்கவேண்டும்.

அமைதியான சூழ்நிலை மாறுமாகவிருந்தால், முன்னர் போன்று இராணுவத்தினரும் பொலிஸாரும் வீதிகளில் முகாங்களை அமைத்து வீதிச் சோதனை முன்னெடுக்கும் நிலை ஏற்படும். அதனால் அமைதிக்கு பங்கேம் ஏற்பட ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது.

இராணுவத்தினருடன் இணைந்து பணியாற்றுமாறும் எமது மக்கள் நலன்சார் திட்டங்களுக்கு ஒத்துழைக்குமாறும் தமிழ் மக்களிடம் கேட்டுக்கொள்கின்றேன்.

யாராவது அமைதிக்கு பங்கம் விழைவிக்க முற்படுவாராயின் அவர்களை வலுப்படுத்துவதை நிறுத்தி, நாட்டின் அமைதியைப் பாதுகாக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன் – என்றார்.