கிராம உத்தியோகத்தர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு

0
584

கிராம உத்தியோகத்தர்களின் பல பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வுக்கு அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

இலங்கை ஐக்கிய கிராம உத்தியோகத்தர் சங்கத்திற்கும் அமைச்சருக்குமிடையில் இதுதொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது.

இந்த பேச்சுவார்த்தை குறித்து இலங்கை ஐக்கிய கிராம உத்தியோகத்தர் சங்கம் தெரிவிக்கையில் கிராம உத்தியோகத்தர்களின் பல பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வைப் பெற்றுக் கொடுக்கும் புதிய சம்பளத் திட்டத்துடன் கூடிய சேவை யாப்பிற்கு புதிய அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது என்று குறிப்பிட்டது.
பல வருடங்களாக இது தொடர்பில் கோரிக்கை விடுக்கப்பட்ட போதிலும் இதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை. அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்தவுடன் இது தொடர்பாக கலந்துரையாடியதன் பின்னர் இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான அமைச்சரவைப் பத்திரமொன்றை சமர்ப்பிக்க இணக்கம் தெரிவிக்கப்பட்டது என்று மேலும் தெரிவித்தது.