மண்முனைதென்மேற்கு மீனவர்களுக்கு தோணி வழங்கி வைப்பு

0
467

மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட மீனவர்களுக்கு இன்று(26) திங்கட்கிழமை தோணிகள் வழங்கி வைக்கப்பட்டன.

மீள்குடியேற்ற புனர்வாழ்வு அமைச்சின் நிதியொதுக்கீட்டின் 12பேருக்கான தோணிகளே இன்று வழங்கி வைக்கப்பட்டன. இதனை மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மா.உதயகுமார், மண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளர் தெட்சணகௌரி தினேஸ், செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள் வழங்கி வைத்தனர்.

மீனவர்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் வகையில் இத்தோணிகள் வழங்கி வைக்கப்பட்டன.

பிரதேசத்திற்குட்பட்ட 25மீனவர்களுக்கு குறித்த தோணிகள் வழங்கப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக 12மீனவர்களுக்கு இன்றைய தினம் தோணிகள் வழங்கிவைக்கப்பட்டதாக பிரதேச செயலாளர் இதன்போது குறிப்பிட்டார்.

மீன்பிடி தொழிலில் ஈடுபட்ட நிலையிலும், வாவிகளில் மீன்பிடிப்பதற்கு தோணிகள் இன்றி சிரமங்களை எதிர்கொண்ட மீனவர்களுக்கே தோணிகள் வழங்கி வைக்கப்பட்டன.