நாங்கள் மட்டக்களப்பான் என பிரதேசவாதம் பேசுவோரில் எத்தனை பேர் அம்மக்களுக்கு உதவுகின்றனர்

0
355

பிரதேச வாதம் பேசி ” நாங்கள் மட்டக்களப்பான் ” என்று உணர்ச்சி ஊட்டி , சுய நல பிழைப்பு வாதம் செய்த – செய்து கொண்டிருக்கும் பலரைப் பற்றிய அனுபவம் எனக்கு நிறைய உண்டு.

பாவம் எமது மக்கள்…

இது பற்றி , நிறைவே என்னால் எழுத முடியும்.

இன்று , மீண்டும் “பிரதேசவாதம்” என்ற இந்த அபத்த கோசம் எழுந்துள்ளது.

இவ்வாறான பிரதேசவாத – குறும் குழுவாத அரசியல் என்பது , அவர்களின் தனிப்பட்ட வாழ்வை வளம்படுத்த அவர்கள் கையாளும் அரசியல் தந்திரம்.

இந்தக் கோசத்தை முன்வைப்பவர்களின் பெரும்பான்மையோர், ஒடுக்குமுறைகளுக்கு உள்ளாகும் சமூகங்கள் பற்றியோ, அவர்களின் விடுதலை பற்றியோ, எந்தவித அக்கறைகளும் அற்றவர்களாகவே இருந்துள்ளனர்.

இப்பொழுதும் அவ்வாறே உ ள்ளனர்.

இது ஒரு, அவர்களின் அரசியல் பிழைப்புவாதம்..!

எம் மட்டக்களப்பு மக்கள் மீதான இவர்களின் அக்கறை என்பது, இவர்களின் திட்டமிட்ட அரசியல் செயல் நடவடிக்கைகள் -எழுத்துக்கள் படைப்புக்கள்- ஊடாக போலித்தனமானது என்பதை அம்பலப்படுத்தி விடுகின்றது.

இவை அனைத்தும் தங்களின் அடையாளங்களுக்காகவும், இருத்தலுக்கானதாகவும் , பிழைப்புக்கானதாகவுமே இருப்பதுவே உண்மையாகின்றது.

இவர்களின் தனிப்பட்ட வாழ்வையும் , இவர்களின் அரசியலையும் அவதானிக்கும் எவரும் இலகுவாய் இதனை புரிந்து கொள்ளமுடியும்.

பேரினவாத இலங்கை அரசுகளின் ஒடுக்குமுறைகளாலும், இன அழிப்புக்களாலும் துயர்கொண்ட கொடுமை நிறைந்த வாழ்வை, வட கிழக்கு தமிழ்பேசும் மக்கள் அனுபவித்துக் கொண்டு வருகின்றனர்.

இன்று, அடிப்படை கல்வி -பொருளாதார வாழ்வாதாரங்கள் எதுவும் அற்று, வாழ்கின்ற மக்கள் கூட்டத்தினரை வடகிழக்கு செல்லும் எவரும் காண்பார்கள்.

ஆனால், புகலிட நாடுகளிலிருந்து ஈழத்தின் வடகிழக்கிற்கு செல்லும் இவர்கள் குறிப்பாக மட்டக்களப்பு பிரதேசத்தின் மீது “காதல்” கொண்டிருப்பதாக சொல்லி பிரதேசவாத நஞ்சை கக்கும் இவர்கள், இதுவரை காலமும் துயர் கொண்ட எம் மக்களுக்கு செய்த உதவிகள்தான் என்ன.?

இவ்வாறான பிழைப்பு அரசியல் செய்யும் பலர், நம்மிடையே தோன்றிக் கொண்டே வருகின்றனர்.

இது ,ஆபத்தான கவலைக்குரிய விடயம்…