மட்டக்களப்பில் மாவீரர் பெற்றோர்கள் கௌரவிப்பு

0
190
(டினேஸ்)
மாவீரர் பெற்றோர்  கௌரவிப்பு நிகழ்வுகள்
ஜனநாயக போராளிகள் கட்சியின் ஏற்பாடு செய்திருந்த  மாவீரர் பெற்றோர் உரித்துடையோர் கௌரவிப்பு நிகழ்வுகள் இன்று அக்கட்சியின் மட்டு அம்பாறை மாவட்ட காரியாலையத்தில் அதன் இணைப்பாளர் எஸ்.நகுலேஸ் தலைமையில்  இடம்பெற்றது.

இனத்தின் விடுதலைக்கு தம்மை ஆகுதி ஆக்கியோரை நினைவில்கொள்ளும் காலமதில் தேசவிடுதலைக்காய் தம் சந்ததியை உவந்தளித்த பெற்றோரை மதிப்பளித்தல் இனத்தின் வரலாற்று கடமையாகும்  அந்த வகையில் இன்றைய தினம்  நூறுவரையிலான மட்டக்களப்பு அம்பாறையை சேர்ந்த மாவீரர்களின் திருவுருவப்படங்கள் பெற்றோரிடம் கையளிக்கப்பட்டது.
நினைவேந்தல்கள் கௌரவிப்புக்கள் என்கின்ற நிலைகளையும் தாண்டி  மாவீரர் பெற்றோர் உரித்துடையோர்களின் அன்றாட வாழ்வியல் தேவைகள் குறித்து மிகவும் கரிசனையுடனும் பொறுப்புடனும் செயலாற்ற வேண்டிய தேவை  போராளிகளிடமும் தேசியத்தை நேசிக்கின்ற அத்தனை தமிழ் சந்ததிகளிடமுமே காலம் கையளித்துள்ளதென்பதை அன்புரிமையுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.