மட்டக்களப்பில் சோளம் செய்கையில் பட்டாளப்புழுவின் தாக்கம்

0
318

மட்டக்களப்பு காஞ்சிரங்குடா விவசாய திணைக்களத்தின் விவசாய போதனாசிரியர் பிரிவின் ஏற்பாட்டில் சோளம் செய்கையில் பட்டாளப்புழு பீடையை கட்டுப்படுத்தல் தொடர்பில் விவசாயிகளுக்கு விழிப்பூட்டும் கருத்தரங்கு சில்லிக்கொடியாறு பகுதியில் சனிக்கிழமை இடம்பெற்றது.

காஞ்சிரங்குடா விவசாய திணைக்களத்தின் விவசாய போதனாசிரியர் ப.சகாப்தன்; தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பிரதி விவசாய பணிப்பாளர் ப.பேரின்பராசா பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

மேலும் மத்தி வலய உதவி விவசாய பணிப்பாளர் எம்.எஸ்.எம்.சலீம், மட்டக்களப்பு மாவட்ட விவசாய திணைக்கள மறுபயிர் பாடவிதான உத்தியோகத்தர்கள், விவசாயிகள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது மட்டக்களப்பு மாவட்ட பிரதி விவசாய பணிப்பாளர் ப.பேரின்பராசாவினால் பட்டாளப்புழு எனும் பீடையில் இருந்து பாதுகாக்கும் வழிமுறைகள் தொடர்பிலும், பட்டாளப்புழு சம்பந்தமாகவும் கருத்துக்களை வழங்கினார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் விவசாயத்தின் மறுவயற் பயிரான சோளம் பயிர்ச் செய்கையை தாக்கி பெருமளவில் பாதிப்பை ஏற்படுத்தும் வெளிநாட்டில் இருந்து இலங்கைக்குள் உள் நுழைந்த அந்நிய நாட்டுப் பீடையான படைப்புழுவினுடைய தாக்கத்தில் இருந்து உடனடியாக விவசாயிகளை மீட்டெடுக்கும் நோக்கோடு விவசாயிகளின் பொருளாதாரம் பாதிப்படையாது பாதுகாக்கவும், படைப்புழுவின் தாக்கம் சம்பந்தமாகவும் விவசாய திணைக்களம் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது.