திருமலையில் ஐக்கிய தேசிய கட்சிக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

0
730

கதிரவன் திருகோணமலை

ஐக்கிய தேசிய கட்சிக்கு எதிர்;ப்பு தெரிவித்தும், சபாநாயகர் கரு ஜெயசூரியவுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், பாராளுமன்ற தேர்தலை நடத்தக் கோரியும். திருகோணமலையில் ஆர்ப்பாட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை 2018.11.25 நடத்தப்பட்டது. ஸ்ரீலங்கா சுதந்திரகட்சி, பொது ஜன ஐக்கிய முன்னணி ஆதரவாளர்கள் இணைந்து இதனை ஏற்பாடு செய்திருந்தனர். திருகோணமலை மாவட்ட முந்நாள் பாராளுமன்ற உறுப்பினர்களான சுசந்த புஞ்சிநிலமே, ஜயந்த விஜயசேகர, கிழக்கு மாகாண சபை முந்நாள் அமைச்சர் ஆரியவதி கலபதி, முந்நாள் உறுப்பினரான பிரியந்த பத்திரன ஆகியோரும் இதில்கலந்து கொண்டிருந்தனர்.
ஏகாம்ரம் வீதி குவாட்டலூபே தேவாலயத்தி;ன் முன் இருந்து ஊர்வலமாக புறப்பட்ட இவர்கள் மணிக்கூண்டு கோபுர முன்றலை வந்தடைந்த அங்கு எதிர்ப்பு கோசங்களை எழுப்பினர் 10.00 மணிக்கு ஆரம்பித்த இந்த எதிர்ப்பு நடவடிக்கை சுமார் ஒரு மணிநேரம் வரை நீடித்தது.