இலங்கைக்கு விழுந்த முதல் அடி நிதியை நிறுத்தியது சர்வதேச நாணய நிதியம்

0
572

இலங்கைக்கான நிதியுதவியை இடைநிறுத்துவதற்கு சர்வதேச நாணயநிதியம் தீர்மானித்துள்ளது.

சர்வதேச நாணயநிதியத்தின் இலங்கைக்கான பேச்சாளர் ஹெரி ரைஸ் இதனை தெரிவித்துள்ளார். தனது அமைப்பு இலங்கைக்கான நிதிஉதவியை இடைநிறுத்திவைக்க தீர்மானித்துள்ளது  என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் அரசியல் நிலை குறித்து மேலதிக தெளிவு ஏற்படும் வரை நாங்கள் நிதியுதவியை இடைநிறுத்தியுள்ளோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.