மஹிந்தவுக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட பிரேரணை ஜனாதிபதிக்கு அனுப்பி வைப்பு

0
411

பாராளுமன்றத்தின் நிலையியல் கட்டளையின் பிரகாரம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீண்டும் 122 பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது என சபாநாயகர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு எழுத்து மூலமாக அறிவித்துள்ளார் என சபாநாயகர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.மேலும் இவ்விடயத்தினை கருத்திற் கொண்டு அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.