இன்றைய சந்திப்பில் ஜனாதிபதி கட்சித்தலைவர்களுக்கு கொடுத்த வாக்குறுதி.

0
582

பாராளுமன்றத்தின் பெரும்பான்மையினை கருத்திற் கொண்டு ஜனநாயக ரீதியாகவும் சுயாதீனமாகவும் நடந்து
கொள்வதாக ஜனாதிபதி வாக்குறுதி அளித்துள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோகணேசன் தெரிவித்தார்.இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,

ஜனாதிபதி செயலகத்தில் தற்போது இடம்பெற்ற இப் பேச்சுவார்த்தை வெற்றிகாரமாக நடைபெற்று முடிந்துள்ளது.

அதனையிட்டு நான் மகிழ்ச்சியடைகின்றேன்.

இந்தப் பேச்சுவார்த்தையின் போது இரண்டு விடயங்கள் தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எம்முடன் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார்.

முதலாவதாக பாராளுமன்றத்தின் பெரும்பான்மையினை கருத்திற் கொண்டு ஜனநாயக ரீதியாகவும் சுயாதீனமாகவும் தான் நடந்து கொள்வதாக வாக்குறுதி அளித்திருக்கிறார்.

அதுமட்டுமின்றி இன்று பாராளுமன்றத்தில் நடைபெற்ற குழப்ப நிலை தொடர்பில் அதிருப்தியையும், கண்டனத்தையும் வெளியிட்டிருந்தார்.

அத்துடன் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை பெறுவோருக்கு ஆட்சி வழங்கப்படும் என்றும் நாடு இன்னும் ஓரிரு தினங்களில் வழமைக்கு திரும்பும் எனவும் இதன்போது ஜனாதிபதி தெரிவித்ததாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோகணேசன் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இதன்போது மற்றுமொரு விடயம் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது அந்த விடயத்தை என்னால் பகிரங்கமாக தற்போது வெளியிட முடியாது எனவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாக்க, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாத் பதியூதீன் மற்றும் சபாநாயகர் கரு ஜயசூரிய, ஐக்கிய தேசிய கட்சியின் பிரதிநிதிகள் பலரும் இந்த சந்திப்பில் கலந்து கொண்டிருந்தனர்.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிக்கு உடனடியாக தீர்வு காண்பது குறித்து இந்த கூட்டத்தின் கலந்துரையாடப்பட்டதாக ரவி கருணாநாயக்க தெரிவித்திருந்ததுடன், புதிய பிரதமர் தொடர்பில் எதுவும் கலந்துரையாடப்படவில்லை எனவும் அவர் தெரிவித்தமை  குறிப்பிடத்தக்கது.

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிக்கு தீர்வு காணவும், பாராளுமன்ற தீர்ப்பை ஏற்றுக் கொள்ளவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இணக்கம் தெரிவித்துள்ளதுடன் .

நேர்மையான முறையில் பெரும்பான்மையை காட்டுமாறும் அதனை தான் ஏற்றுக் கொள்வதாகவும் அவர்  தெரிவித்துள்ளது அனைவராலும் வரவேற்கத்தக்க முன்னெடுப்பு என்பதில் சந்தேகமில்லை.