கூட்டுறவுச்சங்கங்கள் நல்லாட்சியை வெளிப்படுத்தும் வகையில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டிருக்கவேண்டும்

0
465

கூட்டுறவுச்சங்கங்கள் நல்லாட்சியை வெளிப்படுத்தும் வகையில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டிருக்கவேண்டும்

என திருகோணமலை மாவட்ட கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் வே.வேல்வேந்தன் தெரிவித்தார்.

கடந்த இரண்டு நாட்களாக திருகோணமலை சர்வோதய நிலயத்தில் நடந்த கூட்டுறவுச்சங்கங்களுடனான கலந்துரையாடலில் கலந்துகொண்டு அவர் உரையாற்றினார்.இளைஞர் அபிவிருத்தி அகம் அமைப்பின் இணைப்பாளர் த.தலீப்குமார் தலமையில் ஆரம்பமான இக்கலந்துரையாடலில் அவர்மேலும் குறிப்பிட்டதாவது, திருகோணமலை மாவட்டத்தில் 2019இல் கூட்டுறுவுச்சங்களின் நடவடிக்கைளில் பல அபிவிருத்திப்பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

இச்சங்கங்கள் சமூகத்தின் பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்திக்கு ழிகவும் முக்கிய பங்களிப்பை வழங்கவேண்டியவையாகவுள்ளன.

சங்கத்தின் எல்லைப்பரப்பில் கிடைக்கும் வழங்களைக்கொண்டு பல்வேறு அபிவிருத்தியை சுதந்திரமாக செய்யக்கூடிய பலம் இவ்வமைப்புக்களுக்குள்ளன.

நாட்டின் இவ்வாறான பல அமைப்புக்கள் மிகவும் சிறப்பாக செயற்படுகின்றன.

இவ்வாறான அமைப்புகளுடன் எமது அதிகாரிகளுக்கு பெரியளவிலான பணிகள் இருக்கப்போவதில்லை. சட்டதிட்டங்களுக்கு அமைவாக கணக்காய்வு கண்காணிப்பு,ஆலோசனைகள் போன்றவற்றை சுதந்திரமாக மேற்கொள்ளும் கடைப்பாடு இருக்கும் ஆனால் சில சங்கங்கள் கூட்டுறவுக்கொள்கையையும் அதன் சட்டதிட்டங்களையும் விளங்கி செயற்படுவதில்லை. இதனால் மோசடிகள்,முறைகேடுகள் போன்றன ஏற்படுகின்றன.அவ்வாறான சங்கங்களின் நடவடிக்கையில் அதிகாரிகளின் நடவடிக்கை அதிகமாகத்தேவைப்படுகின்றன.

ஆனால் கூட்டுறவுச்சங்கங்கள் சிறந்த நல்லாட்சிக்கொள்கையுடன் செயற்படவேண்டும்

எடுக்கப்படும் தீர்மானங்கள் சகல உறுப்பினர்களும் அறிந்திருக்கும் வகையில் எடுக்கப்படவேண்டும்

குறிப்பாக நல்லாட்சியின் அம்சங்களின் ஒன்றான வெளிப்படைத்தன்மையை சங்க நிர்வாகம் பின்பற்றுதல் கட்டாயமாகும் எனவும் குறிப்பிட்டார். இந்நிகழ்வில் பின்தங்கிய இத்திக்குளும்,இளக்கந்தை,சின்னக்குளம்,தங்கபுரம்,புளியடிச்சோலை நாவலடி,இரால்குழி,போன்ற பல கிராமங்களைச்சார்ந்த பல சங்கங்களின்பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். அகத்தின் ஏற்பாட்டில் “விஎபெக்கற”; நிறுவன ஆதரவுடன் இச்செயலமர்வு இடம்பெற்றன. இந்நிகழ்வில் தலமை கூட்டுறுவு அபிவிருத்தி அதிகாரி ஏ.நசீர், மற்றும் அகத்தின் பிரதி இணைப்பாளர் பொ.சற்சிவானந்தம், மற்றும் பல கூட்டுறுவு அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டனர்.