படுவான்கரை எழுவான்கரைக்கான போக்குவரத்து துண்டிக்கப்படும் அபாயம்.

0
569

(படுவான் பாலகன்) மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்துவருகின்ற மழை காரணமாக, தாழ்நிலப்பகுதிகள் பல வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. அதேவேளை வீதிகள் பலவற்றிலும் வெள்ளநீர் பாய்ந்தோடுகின்றது. இதனால் படுவான்கரைக்கும், எழுவான்கரைக்குமான போக்குவரத்து துண்டிக்கப்படக்கூடிய அபாயமுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

படுவான்கரையையும், எழுவான்கரையையும் பிரிக்கின்ற மண்முனைப் பாலத்திற்கு அருகில் 2அடிக்கு மேல் நீர் பாய்கின்றது. அதேவேளை வலையிறவு பாலத்தின் ஊடாகவும் அதிக நீர் பாய்ந்துகொண்டிருக்கின்றது. இதனால் போக்குவரத்துதடைப்பட்டுள்ளதாக பயணிகள் தெரிவிக்கின்றனர். இதன்காரணமாக படுவான்கரைக்கும், எழுவான்கரைக்குமான போக்குவரத்து துண்டிக்கப்படலாம் என எதிர்வுகூறப்படுகின்றது.

குறித்த பாலங்களின் ஊடாக போக்குவரத்துச் செய்கின்றவர்கள், அவதானமாக செல்லுமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது.