கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் 2000க்கு மேற்பட்டவர்கள் காப்பணிந்து கொண்டனர்.

0
292

இந்து மக்களினால் அனுஸ்டிக்கப்படும் விரதங்களில் ஒன்றான கேதாரகௌரி விரதத்தின் இறுதிநாளான இன்று(07) புதன்கிழமை கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் 2000க்கும் மேற்பட்ட அடியார்கள் காப்பணிந்து கொண்டனர்.

சிவனைநோக்கி அனுஸ்டிக்கப்படும் இவ்விரதமானது, இவ்வருடம் 20நாட்களாக அனுஸ்டிக்கப்பட்டு, இன்றைய தினம், உபவாசமிருந்து, அமவாசை தினத்தில் காப்பணிந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.