வடமாகாணத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை

0
206

வடமாகாணத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (5) விடுமுறை வழங்குமாறு வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே கல்வி அமைச்சின் செயலாளருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

தீபத்திருநாள் பண்டிகையை முன்னிட்டு வடமாகாண மக்கள் அனைவரும் தீபாவளி தினத்தை மகிழ்ச்சியாக கொண்டாடும் வகையில் இந்த விடுமுறையை வழங்குமாறும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த விடுமுறைக்கான தினத்தினை எதிர்வரும் சனிக்கிழமை பாடசாலை நடாத்தி சரி செய்து கொள்ளுமாறும் கல்வி அமைச்சின் செயலாளருக்கு வடமாகாண ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பில் வட மாகாணத்திற்கு உட்பட்ட அனைத்து பாடசாலைகளுக்கும் இன்று  அறிவித்தல் வழங்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.

மத்திய மாகாண தமிழ் பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை

மத்திய மாகாண கல்வித் திணைக்களத்திற்குட்பட்ட அனைத்து தமிழ் பாடசாலைகளுக்கும் தீபாவளி திருநாளை முன்னிட்டு நாளை 5.11.2018 திங்கட்கிழமை விடுமுறை வழங்கப்படதுள்ளது.

மத்திய மாகாண தமிழ் பாடசாலைகள் அனைத்திற்கும் மத்திய மாகாண ஆளுனரின் அனுமதிக்கிணங்கவே திங்கட்கிழமை விடுமுறை வழங்கப்படுவதாக மத்திய மாகாண மேலதிக கல்விப் பணிப்பாளர் திருமதி ஏ.ஆர்.சத்தியேந்திரா தெரிவித்துள்ளார்.

இத்தினத்திற்கு பதிலாக அடுத்த வாரம் 10.11.2018 சனிக்கிழமையன்று அனைத்து பாடசாலைகளிலும் கற்பித்தல் நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட வேண்டும் என அதிபர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.