வனரோபா தேசிய மரநடுகை

0
182
வனரோபா தேசிய மரநடுகை திட்டத்திற்கு அமைவாக பழுகாமம் கண்டுமணி மகா வித்தியாலயத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு வித்தியாலயத்தின் அதிபர் க.கமலநாதன் தலைமையில் நடைபெற்றது.
சுற்றாடல் அதிகார சபையும் மாவட்ட திணைக்களமும் இணைந்து முன்னெடுத்துவரும் இத்திட்டத்திற்கு அமைவாகவே குறித்த மரம் நடுகை நிகழ்வு பாடசாலையில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் போராதீவுப்பற்று பிரதேச சுற்றாடல் உத்தியோகத்தர் எம்.சதீஸ்குமார், பாடசாலை சுற்றாடல் குழுவுக்கு பொறுப்பான ஆசிரியர்கள்,  பாடசாலை சுற்றாடல் குழுவில் அங்கத்துவம் வகிக்கும் மாணவர்கள், என்போர் கலந்து கொண்டனர். இதன் போது மாணவர்களுக்கு சுற்றாடல் குழுவினை பிரதிநித்துவப்படுத்தும் இலச்சினை, தலையங்கி,மற்றும் குறிப்பு புத்தகம் என்பன இதன்போது வழங்கி வைக்கப்பட்டது