ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன நடந்­து­கொண்­ட­விதம் நியா­ய­மற்­ற­தாகும். நன்­றி­யீ­ன­மாகும்.

0
309
அர­சியல் களத்தில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன நடந்­து­கொண்­ட­விதம் நியா­ய­மற்­ற­தாகும். நன்­றி­யீ­ன­மாகும். அவர் தீர்­மானம் ஒன்று மேற்­கொள்ளும் முன்பு சிறு­பான்மை சமூ­கத்தைப் பிர­தி­நிதித்­து­வப்­ப­டுத்­து­ப­வர்­க­ளுடன் கலந்­தா­லோ­சித்­தி­ருக்க வேண்டும்.

ஜனா­தி­பதி பத­வியில் அமர்த்­து­வ­தற்கு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்­கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் மற்றும் தமிழ் கட்­சிகள் பெரும் பங்­க­ளிப்­பினை செய்­துள்­ளன. இதனால் எம்­முடன், கலந்­து­ரை­யா­டியே ஜனா­தி­பதி அர­சியல் மாற்­றங்­களை செய்­தி­ருக்க வேண்டும் என அகில இலங்கை மக்கள் காங்­கி­ரஸின் தலை­வரும் முன்னாள் அமைச்­ச­ரு­மான ரிஷாட் பதி­யுதீன் தெரி­வித்துள்ளார்.