துறைநீலாவணை பழையமாணவர் சங்க சம்பியன் கிண்ணம் 2009 கல்வியாண்டு அணி வசம்

0
174

 

துறைநீலாவணை மகாவித்தியாலய பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் நடாத்தப்பட்ட மென்பந்து கிறிக்கட் சுற்றுப்போட்டி 2018ம் வருடத்தின் வெற்றிக்கிண்ணத்தை 2009ம் வருட உயர்தர கல்வியாண்டு  பழைய மாணவர் அணி கைப்பற்றியது.

துறைநீலாவணை மகாவித்தியாலய பழைய மாணவர்சங்கத்தின் ஏற்பாட்டில் பழைய மாணவர்களுக்கிடையில் பாடசாலை மைதானத்தில் நேற்று புதன்கிழமை (24.10.2018) இவ் மென்பந்து கிறிக்கட் போட்டி நடைபெற்றது.
இப் போட்டியில்  பாடசாலையில் கல்விகற்று வெளியேறிய ஏழு அணிகள் கல்வி ஆண்டு அடிப்படையில் கலந்து கொண்டன.

அணிக்கு எட்டுவீரர்கள்(8) கொண்ட பத்து ஓவர்கள்(10) மட்டுப்படுத்தப்பட்டு விலகல் முறையில் நடைபெற்ற இந்த சுற்றுப்போட்டியில் இறுதி போட்டிக்கு 2009 உயர்தர கல்வியாண்டு அணியும் 2012 உயர்தர கல்வியாண்டு அணியும் தகுதி பெற்றன.

இறுதிப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய 2019 உயர்தர கல்வியாண்டு அணி 54 ஓட்டங்களை பெற்று  2012 உயர்தர கல்வியாண்டு அணியை 38 ஓட்டங்களுக்குள் கட்டுப்படுத்தி 16 ஓட்டங்களால் வெற்றியை தனதாக்கி 2018ம் வருடத்திற்க்கான துறைநீலாவணை பழைய மாணவர் சங்கத்தின் சம்பியன் கிண்ணத்தை தனதாக்கி கொண்டனர்.

பரிசளிப்பு நிகழ்வில் பாடசாலை அதிபர் ரி.ஈஸ்பரன், (பழைய மாணவர் சங்கத்தின் தலைவர்), செயலாளர் என்.நவநீதராஜா, இணைத்தலைவர் ரி.சதீஸ் ,  பொருளாளர் அ.வேளராசு ஆகியோர் அதிதிகளாக கலந்துகொண்டு கிண்ணங்களை வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.