விக்னேஸ்வரனுடன் பயணிப்பதற்கு நான் தயாரில்லை

0
351

முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தமிழ்த் தேசிய கூட்டமைப்பிலிருந்து விலகி தனி கட்சி ஒன்றை அமைப்பாராக இருந்தால் விக்னேஸ்வரனுடன் இணைந்து பயணிப்பதற்கு நான் தயாராக இல்லையென வடமாகாண சபை முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கூறியுள்ளார்.

வட மாகாண சபையின் இறுதி அமர்வில் தனது நிறைவுரையை ஆற்றும்போதே சிவாஜிலிங்கம் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இதே விடயத்தை நேரில் சந்திக்கும்போதும் கூட முதலமைச்சர் ஒருதடவை கூறினார்.

ஆனால் நான் அவருக்கு அப்போது கூறியதையே இப்போதும் கூறுகிறேன். தமிழ் மக்களுக்கு இப்போது தேவையானது அடுத்த முதலமைச்சரோ, மாகாணசபை உறுப்பினர்களோ, பாராளுமன்ற உறுப்பினர்களோ அல்ல. தமிழ் மக்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வு ஒன்றே சமகால இன்றியமையாத தேவையாகும்.