அசையா விவசாய மக்களுக்கு மட்டக்களப்பில் மரியாதை

0
416
அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள காலஞ்சென்ற விவசாய மக்களை கௌரவம் செய்யும் நிகழ்வு இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை மேற்கு பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட முள்ளாமுனை அரசடிப்பிள்ளையார் ஆலய வளாகத்தில் நடைபெற்றது.

ஆயித்தியமலை கமநல சேவைகள் பிரிவு திட்ட முகாமைத்துவக் குழுச் செயலாளர் எஸ்.பிறைசூடி தலைமையில் நடைபெற்ற இவ் கௌரவப்படுத்தும் மற்றும் தானம் வழங்கும் நிகழ்வில், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மா.உதயகுமார், மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் கே.சுதாகர், தேசிய உரச் செயலக மட்டக்களப்பு மாவட்ட உதவிப்பணிப்பாளர் கே.எல்.எம்.சிராஜுன், கமநல சேவைகள் பிரிவு பெரும்பாக உத்தியோகத்தர் எம்.ஏ.ரசிட் மற்றும் உத்தியோகத்தர்கள், விவசாயிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது, ள்ளாமுனை அரசடிப்பிள்ளையார் ஆலயத்தில் பூஜை வழிபாடுகள் நடைபெற்று, ஆலயத்தின் மண்டபத்தில் கடந்தகாலங்களில் இப்பிரதேசத்தில் இயற்கை எய்திய விவசாயிகளது புகைப்படங்கள் வைக்கப்பட்டு இந்து மத முறைப்படி விசேட வழிபாடுகள் நடைபெற்று அஞ்சலியும் செலுத்தப்பட்டது.
காலஞ்சென்ற விவசாய மக்களை தேசத்தின் வளமாகக் கருதி அவர்களுக்கு கௌரவம் செலுத்தும் வேலைத்திட்டமொன்று இவ்வருடம் முதல் சகல கமநல சேவைகள் அதிகாரப் பிரதேசத்திலும் நடத்துவதற்கான நடைமுறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இலங்கையின் கமநல வரலாற்றில் முதல் தடவையாக ஆரம்பிக்கப்படும் விவசாய வேலையில் ஈடுபடும் விவசாய மக்கள் ஞாபகார்த்த வேலைத்திட்டம் இதுவாகும்.
இந்தத் தேசிய வேலைத்திட்டத்தின் ஊடாக இலங்கை கமநல சமூகத்தின் அபிமானத்தை பலப்படுத்துவதும் சகல இனங்களுக்கிடையில் ஒற்றுமையை ஏற்படுத்துவதும் விவசாய மக்களை தேசிய வளமொன்றாக கருத்திற்கொண்டும் உயர்வுடன் முன சென்று கொண்டும் இலங்கை விவசாய வேலையின் உயிர்ப்பான நவீன முறையொன்றை செய்வதும் குறிக்கோளாக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு மதப்பிரிவினரும் தம்முடைய மத அனுஸ்டானங்களுடன் இவ் நிகழ்வினை நடத்துவதென்றும், நாட்டின் சகல கம நல சேவைகள் பிரிவிலும் நடைமுஐறப்படுத்தும் வகையில் இவ் வேலைத்திட்டம் ஏற்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்