மட்டில் தந்தை செல்வாவின் சிலை திறந்து வைப்பு

0
1213

(க. விஜயரெத்தினம்)
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகத் தலைவர் அமரர் தந்தை சா.ஜே.வே.செல்வநாயகத்தின் திருவுருவச் சிலை எழுச்சியாக மட்டக்களப்பில் திறந்து வைக்கப்பட்டது.

மட்டக்களப்பு பஸ் நிலையச் சந்தியில் ,வாவிக்கரை வீதியில் அமைக்கபபட்ட திருவுருவச் சிலையானது, திங்கட்கிழமை(15.10.2018)பிற்பகல் 3.40 மணியளவில் திறந்து பொதுமக்களின் பாவனைக்காக திறந்து  வைக்கப்பட்டது.

தந்தை செல்வநாயகத்தின் சிலையை தமிழரசுக்கட்சியின் தலைவர் சம்பந்தன் திரைநீக்கி திறந்து வைத்தார்.பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா அவர்கள் சிலைக்கு மாலை அணிவித்து வைக்கப்பட்டது.

தந்தை செல்வாவின் சிலை திறப்புவிழாவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும்,தமிழரசுக் கட்சியின் பெருந்தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமாகிய இரா.சம்பந்தன், தமிழரசுக் கட்சியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சோ.சேனாதிராஜா,  நாடாளுமன்ற உறுப்பினர்களான ஞா.ஸ்ரீநேசன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பின.ன்களான பா.அரியநேந்திரன்,பொன்.செல்வராசா,த.கனகசபை,தமிழரசுக்கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராஜசிங்கம்,அம்பாறை,மட்டக்களப்பு மாகாண சபை உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள்,மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவான்,உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள், உறுப்பினர்கள், கட்சிக் கிளைகளின் உறுப்பினர்கள், கட்சி ஆதரவாளர்கள்,பொதுமக்கள் கலந்து கொண்டார்கள்.