மட்டக்களப்பில் சர்வதேச வெள்ளைப்பிரம்பு தின விழிப்புணர்வுப் பேரணி

0
216

சர்வதேச வெள்ளைப்பிரம்பு தினத்தை முன்னிட்டு இன்றைய தினம் திங்கட்கிழமை (15) காலை மட்டக்களப்பு தரிசனம் விழிப்புணர்வற்றோர் பாடசாலையினரின் ஏற்பாட்டில் விழிப்புணர்வுப் பேரணியொன்று நடைபெற்றது.

மட்டக்களப்பு லயன்ஸ் கழகத்தின் தலைவர் எஸ்.டினேஸ் தலைமையில் நடைபெற்ற இவ் விழிப்புணர்வுப் பேரணியில், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மா.உதயகுமார் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.

சிறப்பு அதிதியாக மாவட்ட தலைமை சமூக சேவைகள் அதிகாரி எம்.அலியார் கலந்து கொண்டார். கௌhரவ அதிதியாக மட்டக்களப்பு லயன்ஸ் கழக பிராந்தியத் தலைவர் எஸ்.சடாச்சரராஜா கலந்து கொண்டார்.

இப் பேரணியில் மட்டககளப்பு நகரிலுள்ள மகாஜனாக் கல்லூரி, இந்துக் கல்லூரி, சிவானந்தா தேசியப்பாடசாலை, விவேகானந்தா மகளில் வித்தியாலயம் உள்ளிட்ட பாடசாலைகளின் மாணவ மாணவிகள், ஆசிரியர்கள் கலந்து பங்கு கொண்டனர். அத்துடன், மட்டக்களப்பு தரிசனம் விழிப்புணர்வற்றோர் பாடசாலையின் ஆசிரியர்கள், நிருவாகிகளும் கலந்து கொண்டனர்.

இதன்போது பேரணியில் கலந்து கொண்டோர் வெள்ளைப்பிரம்பு தினத்தைப் பிரதிபலிக்கும் வாசகங்கள் மற்றும் தங்களது உரிமைகள் சார் வாசகங்கள் ஏந்திச் சென்றனர்.

கண்பார்வையற்ற விழிப்புலனற்ற மானிடர்பால் எமது கவனம் ஈர்க்கப்பட வேண்டிய நல்லதோர் வாய்ப்பினை உலகுக்கு துலாம்பரமாக வெளிச்சமிட்டு காட்டுவதே இவ்வெள்ளைப் பிரம்பு தினமாகும்.

உலக வெள்ளை 1961 முதல் வெள்ளைப் பிரம்பு தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கதாகும்.

ஒவ்வொரு வருடமும் ஒக்டோபர் 15 ஆம் திகதி விழிப்புலனற்றோருக்கான வெள்ளைப் பிரம்பு தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.