கிழக்கில் நிருவாகரீதியில் ஏற்பட்டுள்ள சிக்கல் மாணவர்களின் கல்வியினைப்பாதிக்கும்.

0
588

கல்வி இராஜாங்க அமைச்சர்கலாநிதி வேலுசாமி இராதாகிருஸ்ணன்

கிழக்கு மாகாணத்தில் தற்பொழுது மாகாண சபை ஆட்சி நிறைவடைந்திருக்கின்ற இந்த நிலையில் இங்கே நிர்வாக ரீதியாக ஒரு சில சிக்கல்கள் ஏற்பட்டிருப்பதாக தெரியவருகின்றது. இந்த சிக்கல்கள் நிவர்த்தி செய்யப்படாவிட்டால் அது மாணவர்களின் கல்வியையே பாதிக்கும் என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ்முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும் கல்வி இராஜாங்க அமைச்சருமான கலாநிதி வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீ சித்திவிநாயகர் மகா வித்தியாலயத்தின வருடாந்த பரிசளிப்பு விழாவும் அமிர்த சுரபி நூல் வெளியீடும் நேற்று நடைபெற்றது.இதில் பிரதம அதிதியாக மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ்முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும் கல்வி இராஜாங்க அமைச்சருமான கலாநிதி வேலுசாமி இராதாகிருஸ்ணன் கலந்து கொண்டார்.

விசேட அதிதியாக மட்டக்களப்பு வலய கல்வி பணிப்பாளர் க.பாஸ்கரன் கலந்து கொண்டதுடன்,கௌரவ அதிதிகளாக மன்முனை வடக்கு கோட்ட கல்வி பணிப்பாளர் க.அருட்பிரகாசம்,லெப்டினன் கேணல் மற்றும் 38வது தேசிய மாணவப் படையணியின் ஜே.ஏ.யு.ஜே.பி.ஜயசூரிய ஆகியோரும் கலந்து கொண்டனர்.பாடசாலையின் அதிபர் ந.தர்மசீலன் தலைமையில் நிகழ்வுகள் நடைபெற்றது.

தொடர்ந்து அங்கு உரையாற்றிய இராஜாங்க அமைச்சர்

அண்மையில் வெளிவந்துள்ள ஜந்தாம் தர புலமைப்பரீ;சை பெறுபேறுகளின்படி மிகவும் பின்தங்கிய கஸ்டபிரதேசங்களை சேர்ந்த மாணவர்கள் மிகவும் சிறந்த புள்ளிகளை பெற்று பிரபலமான பாடசாலைகளுக்கு சவால் விடுக்கும் வகையில் சித்தியடைந்திருக்கின்றார்கள் அதனை நான் வரவேற்கின்றேன்.இதே போல எங்களுடைய மலையக பகுதிகளிலும் மாணவர்கள் சித்தியடைந்துள்ளார்கள்.எனவே பாடசாலையில் இருக்கின்ற வளங்களை கொண்டு அவர்களுடைய திறமையின் காரணமாக இந்த பரீட்சையில் வெற்றி கொண்டுள்ளார்கள்.பாடசாலையில் எத்தனை குறைபாடுகள் இருந்தாலும் அவற்றையெல்லாம் பின் தள்ளிவிட்டு மாணவர்கள் தங்களுடைய திறமைகளை வெளிக்காட்டியிருக்கின்றார்கள்.

இலங்கையில் இருக்கின்ற அனைத்து பாடசாலைகளின் தரமும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்ற காரணத்தினால்தான் கல்வி அமைச்சின் மூலமாக அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை எனும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.இதன் மூலம் இன்று பல பாடசாலைகள் நன்மைகளை பெற்றுக் கொண்டுள்ளது.இந்த திட்டமானது ஜந்து வருடத்திற்கு நடைமுறைபடுத்தப்படுகின்ற வகையிலேயே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.அப்படியானால் இந்த திட்டம் நிறைவடைகின்ற பொழுது அநோகமான பாடசாலைகள் சிற்நத நிலையை அடையும்.

இன்று நாட்டில் பொருளாதார ரீதியாக சில பின்னடைவுகள் இருக்கின்றது. அதனை முழுமையாக நிவர்த்தி செய்ய வேண்டுமானால் முதலாவதாக தமிழர்களின் அரசியல் பிரச்சினைக்கு ஜனநாயக ரீதியில் தீர்வை பெற்றுக் கொடுக்க வேண்டும். அப்படி செய்தால் இன்னும் அதிகமான முதலீட்டாளர்களை எங்களுடைய நாட்டிற்கு அழைத்து வர முடியும் அப்படி செய்ய முடியுமாக இருந்தால் நிச்சயமாக எமது பொருளாதாரத்தை அபிவிருத்தி அடைய சேயய் முடியும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது பாடசாலைகளில் திறமைகளை வெளிப்படுத்திய மாணவர்களுக்கு பரிசில்களையும் இராஜாங்க அமைச்சர் வழங்கிவைத்ததுடன் விசேடமாக அமிர்த சுரபி எனும் நூலையும் வெளியிட்டு வைத்தமை குறிப்பிடத்தக்கது.