உறங்கும் அறையில் கையடக்க தொலைபேசி ஆபத்து – சுகாதார அபிவிருத்தி அலுவலகம் எச்சரிக்கை

0
574

உறங்கும் அறையில் கையடக்க தொலைபேசியை பயன்படுத்துதல் மற்றும் இரவு நேரங்களில் நீண்ட நேரம் கையடக்க தொலைபேசியை அருகில் வைத்திருத்தல் சுகாதார பிரச்சனைகள் பலவற்றுக்கு வழிவகுக்கும் என்று சுகாதார அபிவிருத்தி அலுவலகம் தெரிவித்துள்ளது.

 

இவற்றிலிருந்து ஏற்படும் இலத்திரனியல் கதிர்வீச்சின் காரணமாக மூளைக்கும் நரப்பு கட்டமைப்புக்கும் பாதிப்பு ஏற்படக் கூடும் என்பதனால் இவ்வாறு அறிவுறுத்தப்படுகிறது. இரவில் நித்திரை கொள்வதற்கு முன்னர் இவ்வாறான உபகரணங்களை வெளியேற்றி அல்லது செயலிழக்க செய்து வைக்க வேண்டும் என்று சுகாதார மேம்பாட்டு அலுவலகம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.