காலில் விழுந்தவர்களே காலைவாரிவிடும் மிகவும் மோசமான அரசியல். ஞா.ஸ்ரீநேசன் பா.உ

0
650

காலில் விழுந்தவர்களே காலைவாரிவிடும் விதத்தில் மிகவும் மோசமான அரசியலை நான் பார்க்கின்றேன் என மட்டக்களப்புமாவட்ட தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் தெரிவித்தார்.

மகிழடித்தீவு சரஸ்வதி மகா வித்தியாலய அதிபர் பொ.நேசதுரை அவருடைய தலைமையில்  இன்று நடைபெற்றஆசிரியர் தின நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்

நான் முன்பு ஆசிரியராக இருந்து அரசியலுக்கு வந்தவன் உங்களைப்போன்றுதான் நான் ஆசிரியர் சேவையில் இருக்கும்போது உண்மையானவர்களையும், நேர்த்தியானவர்களையும் சந்தித்தேன் பித்தலாட்டம் காட்டுகின்றவர்களை சந்திக்கவில்லை ஆனால் இந்த அரசியலுக்கு வந்ததன் பிற்பாடு

பொய்களை உண்மையாக்குவதும், உண்மைகளை பொய்யாக்குவதும் ஒருவர் செய்வதை தான் செய்வது என்று கூறுவதும் இப்படியான ஒரு மோசமான அரசியல் இது உண்மையில் என்னைப்போன்றவர்களுக்கு பொருத்தமில்லாத ஒரு அரசியல்.

இந்த அரசியலில் நான் பணம் அதிகமாக செலவு செய்யாமல் இவ்வளவு வாக்குகளைப்பெற்று பாராளுமன்றத்துக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளேன் என்றால் அது நான் கற்பிக்கும்போது என்மீது எனது மாணவச்செல்வங்கள் என்மீது வைத்திருந்த அன்புதான் ஒரு காரணம். எனவே எங்களுடைய வேலைகளை சரியாகச் செய்யும்போது போறாமைத்தனம் கொண்டவர்களிடம் இருந்து பல எதிப்புகள் வரலாம் ஆனால் அதையும் தாண்டி வெற்றியடைவதே எமது இலக்காக இருக்க வேண்டும். எனக் குறிப்பிட்டார்.