கிழக்கு மாகாண சபையை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கைப்பற்றும்

0
561

(.முபாரக் )

எதிர்வருகின்ற கிழக்கு மாகாண சபை தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர்கள்,உயர்பீட உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் போராளிகளின் ஒத்துழைப்புடன் கிழக்கு மாகாண சபையை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கைப்பற்றும் என கிண்ணியா நகர சபையின் முன்னால் தவிசாளரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் திருகோணமலை மாவட்ட பிரதான அமைப்பாளரும்மானசட்டத்தரணி ஹில்மி தெரிவித்தார்.

கந்தளாயில்  சனிக்கிழமை (29) மாலை அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தகர்களுடனான சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்:
கிழக்கு மாகாணத்தின் அம்பாரை,மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் செல்வாக்குகள் அதிகரித்து காணப்படுகின்றன, அத்தோடு கிழக்கு மட்டுமன்றி ஒன்பது மாகாணங்களிலும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் வளர்ச்சிப் போக்கு சிறந்த முறையிலே காணப்படுகின்றன, எமது கட்சியின் தேசியத் தலைவர் றிஷாத் பதியுத்தீனின் கரங்களைப் பலப்படுத்துவதற்காக மக்கள் கட்சியோடு இணைந்த வண்ணமுள்ளார்கள்.
கந்தளாய் பிரதேசத்தில் புதிய,பழைய போராளிகளை இணைத்துக்கொண்டு புதிய வேலைத்திட்டங்களை கட்சியின் தேசியத் தலைவரின் நிதி ஒதுக்கீடுகள் மூலம் திருகோணமலை மாவட்டத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லாஹ் மஹ்ரூப்பின் தலைமையில் பல அபிவிருத்தி திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அத்தோடு கந்தளாய் பிரதேச சபையின் உப தவிசாளர் சட்டத்தரணி முதார்,சட்டத்தரணி பௌமி போன்றோரும் இணைந்து கட்சியின் செயற்பாடுகளில் ஈடுபடவேண்டியதோடு, எமது கட்சியின் தேசியத் தலைவர் எந்த வேலைத்திட்டங்களையும் அனைவரின் ஒத்துழைப்புகளுடனும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
கிழக்கு மாகாணத்தில் பெரும்பான்மையாக முஸ்லிம் மக்கள் நான்பத்திநான்கு வீதமானோர் வாழ்ந்து வருகின்றார்கள் அந்த மக்களின் ஒத்துழைப்புக்களோடு கிழக்கில் ஆட்சியை கைப்பற்றுவதில் எந்த சந்தேகமும் இல்லை.
நாட்டில் பன்னிரண்டு வீதம் வாழும் தமிழ் மக்களுக்கு வட மாகாணம் இருக்கின்ற போது கிழக்கில் முஸ்லிம்கள் அதிகமாக வாழ்கின்றமையால் கிழக்கு மாகாணத்தை முஸ்லிம்களே ஆட்சி அமைக்க வேண்டும்.
எமது கட்சியின் தலைமைத்துவத்தோடு அனைவரும் இணைந்து செயற்படுவதன் மூலம் வெற்றியை பெற்றுக்கொள்ள முடியும் என்றார்.