மட்டக்களப்பு மாவட்டத்தில் வாழ்வாதார மேம்பாட்டிற்காக 6கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு-

0
335

பிரதியமைச்சர் அலி சாஹிர் மௌலானா அவர்களால் மட்டக்களப்பு மாவட்டத்தில் வாழ்வாதார மேம்பாட்டிற்காக 6கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு-

தேசிய ஒருமைப்பாடு , நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழிகள் பிரதியமைச்சர் அலி சாஹிர் மௌலானா அவர்களால் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மக்களின் வாழ்வாதாரத்தை விருத்தி செய்து அவர்களின் பொருளாதாரத்தினை கட்டியெழுப்பும் நோக்கில் முன் வைக்கப்பட்ட திட்டத்திற்கு அமைவாக தேசிய ஒருமைப்பாடு , நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சு 60 மில்லியன் (6 கோடி) ரூபாய் நிதியினை ஒதுக்கீடு செய்துள்ளது

மேற்படி நிதி ஒதுக்கீடு தொடர்பான கடிதம் இன்று மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் இற்க அமைச்சினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

குறித்த வாழ்வாதார செயற்திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்கான பூர்வாங்க வேலைகளை உடனடியாக மேற்கொள்வதோடு இவ்வாண்டு நவம்பர் மாதம் 31 ஆம் திகதிக்கு முன்னதாக குறித்த செயற்திட்டத்தை முழுமைப்படுத்துமாறும், அது தொடர்பான பரிந்துரைகளை உடனடியாக முன் வைத்து பணிகளை துரிதப்படுத்துமாறும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

தேசிய ஒருமைப்பாடு , நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழிகள் பிரதியமைச்சராக அலி சாஹிர் மௌலானா அவர்கள் பதவியேற்றுக் கொண்டதன் பிற்பாடு பல்வேறு அபிவிருத்தி பணிகள் முன் கொண்டு செல்லப்படும் நிலையில் குறித்த செயற்திட்டம் மக்கள் நேரடியாக அனுகூலங்களை அடைந்து தங்களது வாழ்க்கைத்தரத்தை உயர்வடையச் செய்யக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்ட பாரிய செயற்திட்டமாக இது அமைந்துள்ளது.

குறித்த செயற்திட்டத்தை மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னெடுப்பது தொடர்பில் பிரதியமைச்சர் அலி சாஹிர் மௌலானா அவர்களால் முன் வைக்கப்பட்ட செயற்திட்ட முன்மொழிவிற்கு தேசிய ஒருமைப்பாடு நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கனேசன் அவர்கள் தனது முழுமையான ஒத்துழைப்பினை வழங்கி உள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.