பிரபாகரனை கோபிக்கமுடியாது.ஆனந்தசங்கரி

0
458

3லட்சம் மக்களின் படுகொலைக்கு சம்பந்தனும் மாவையுமே காரணம்:
பிரபாகரனை கோபிக்கமுடியாது என்கிறார்  ஆனந்தசங்கரி!
(காரைதீவு  நிருபர் சகா)

கடந்த யுத்தத்தில் படுகொலைசெய்யப்பட்ட 3லட்சபேரின் சாவுக்குக் காரணம்
சம்பந்தனும் மாவையுமே. அவர்களே அதற்குப்பொறுப்பு. பிரபாகரனைக்
கோபிக்கமுடியாது.

இவ்வாறு கல்முனையில் நடைபெற்ற தமிழர்விடுதலைக்கூட்டணிக் கூட்டத்தில்
உரையாற்றிய த.வி.கூட்டணியின் செயலாளர்நாயகம் வீ.ஆனந்தசங்கரி
தெரிவித்தார்.

கல்முனைத்தொகுதி த.வி.கூட்டணி ஆதரவாளர்களுக்கான கூட்டம் நேற்று(24)
திங்கட்கிழமை கல்முனை மாநகரசபையின் பிரதிமேயரும் த.வி.கூட்டணியின் மாவட்ட
இணைப்பாளருமான காத்தமுத்து கணேஸ் தலைமையில் கல்முனை பிரிவு 1
பல்தேவைக்கட்டடத்தில் நடைபெற்றது.

கூட்டத்தில் த.வி.கூட்டணி முக்கியஸ்தர்களான முன்னாள் பாராளுமன்ற
உறுப்பினரும் மாகாணசபைஉறுப்பினருமான ஞா.கிருஸ்ணபிள்ளை(வெள்ளிமலை)
கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் எஸ்.சங்கையா த.தே.கூட்டமைப்பு
முக்கியஸ்தரான திருமதி யோகா கனகசபை மாநகரசபை உறுப்பினர் திருமதி
சுமித்ராஜெயசீலன் ஆகியோர் உரையாற்றினர்.

அங்கு ஆனந்தசங்கரி மேலும் உரையாற்றுகையில்:

நான் 1959இல் அரசியலில் ஈடுபடஆரம்பித்தேன். கிட்டத்தட்ட 60வது வருட அனுபவமுண்டு.
நான் யாரையும் காட்டிக்கொடுத்ததில்லை. பதவிதேடி அலையவுமில்லை. ஆனால்
துரோகி என்று அழைப்பார்கள். சம்பந்தன் சரியாகவிருந்திருந்தால் நான்
எம்.பி. பதவியை இழந்திருக்கமாட்டேன்.

2009 யுத்தம் நிறைவடையமுன்னர் கிளிநொச்சி பறிபோனதும் தம்பி பிரபாகரனுக்கு
நீண்ட கடிதமொன்றை எழுதினேன்.  ‘மூன்றரை லட்சம் மக்களின் சாபத்திற்கு
ஆளாகாதீர்கள்.  இந்த யுத்தத்தை வெல்லமுடியாது.  இந்த மக்களின் சாபத்தில்
சாகப்போகிறீர்கள்.எனவே  பேச்சுவார்த்தைக்கு வாருங்கள் ‘என்று எழுதினேன்.
அவர் ‘செய் அல்லது செத்துமடி’ என்றகொள்கையிலுள்ளவர். ‘உயிர் பெரிதல்ல
மானம் பெரிது’ என்ற கொள்கையிலுள்ளவர். அதனால் அவர் கேட்கவில்லை. நடந்ததை
அறிவோம்.

அதற்காக இந்த 3அரை லட்சம் மக்களின் படுகொலைக்கு அவரில் கற்றம்
காணமுடியாது. அவரைக்கோபிக்கமுடியாது.

ஆனால் இதனைத்தடுத்துநிறுத்தி மக்களைக்காப்பாற்றவேண்டிய தார்மீகபொறுப்பும்
கடமையும்  த.தே.கூட்டமைப்பிற்கு இருந்தது.ஆனால் அவர்கள் போனையும்
ஓவ்பண்ணிவிட்டு வாளாவிருந்தார்கள்.
சம்பந்தனும் மாவைசேiனாதிராஜாவும் இந்தக்கொலைகளுக்கு முக்கிய காரணம்.
அவர்களே பொறுப்புக்கூறவேண்டும்.

அன்று ஜனாதிபதி மஹிந்த அனைத்துக்கட்சிகளையும் அழைத்துப்பேசினார். அதற்கு
த.தே.கூட்டமைப்பு வரவில்லை. அந்தக்கூட்டத்தில் சுமார் 30ஆயிரம் மக்கள்
சிக்குண்டுள்ளனர். அவர்களை நாம்காப்பாற்றவேண்டும் என்றார் மஹிந்த . நான்
அதனைமறுத்து அது 3அரைலட்சம்பேர் என்றேன்.அவர் ஆச்சரியப்பட்டார். நான்தான்
இந்த 3அரை லட்சம் மக்களின் துயரம் பற்றி எடுத்துரைத்தேன். அதற்காக
என்மீது மஹிந்த கடுப்பானார். அதற்காக நான் விட்டுக்கொடுக்கவில்லை.

பின்பு இந்தியா மற்றும் பிரிட்டன் அழைப்புவிடுத்தன. அத்தனை
வாய்ப்புகளையும் அவர்கள் தவறிவிட்டார்கள். நடந்தது என்ன? அத்தனை
மக்களையும் இழக்கநேரிட்டது. எனவே இதற்கெல்லாம் அடிப்படைக்காரணம்
த.தே.கூட்டமைப்பின் சம்பந்தரும் மாவையுமே தவிர வேறுயாருமல்ல.

சரத்பொன்சேகா விவகாரம்!
‘புலிகளை ஒளிக்கக்கூட சிறு இடமில்லாமல் அழிப்பேன் என்றும் யுத்தத்தில்
புலிகளை பூண்டோடு அழிப்பேன்’ என்றுகூறி களத்தில் நின்ற
சரத்பொன்சேகாவிற்கு சம்பந்தன் ஆதரவு கொடுத்தார். எவ்வளவு வெட்கக்கேடான
விசயம். தமது இனத்தையே அழித்த ஒருவருக்கு ஆதரவு அளிக்குமாறு கோரியது
துரோகமில்லையா?

18.05.2009 இல் யுத்தம் மௌனிக்கின்றது. 2010 ஜனவரியில் சம்பந்தன்
பத்திரிகைளில் தலைப்புச்செய்தி வெளியிடுகிறார். ‘எமது மக்களின் நலன்கருதி
சரத்பொன்சேகாவை ஆதரிக்க முடிவெடுத்தோம்’ இதுதான் அந்தச்செய்தி.
(பத்திரிகையைக்காட்டுகிறார்.)

தராகி 2004.01.11ஆம் திகதி சகலதமிழ்க்கட்சிகளையும்
தமிழர்விடுதலைக்கூட்டணியின்கீழ் உதயசூரியன் சின்னத்தில் இணைந்து
தேர்தலில் போட்டியிட புலிகளின் தயவுடன் அழைத்தார். அனைவரும்
ஒன்றுபட்டார்கள்.

17ஆம் திகதி மாவையும் சம்பந்தரும் வன்னிசென்று தமிழ்ச்செல்வனுடன் பேசி
ஆளுக்கொரு நியமனப்பத்திரத்தைப் பெற்றுக்கொண்டு உதயசூரியனுக்கு
வேட்டுவைத்தார்கள்.

என்னை வாக்குக்கேட்கவோ பிரசாரம் செய்யவோ அனுமதிக்கவில்லை.  அத்தேர்தலில்
புலிகளின்தயவால் வீட்டுச்சின்னதில் 22பேர் பாராளுமன்றம் போனார்கள்.
கண்டபலன் என்ன?

அன்று ஒற்றுமைப்பட்டிருந்தால் இன்று அதன் நன்மை தெரிந்திருக்கும். இந்த
யுத்தமே நடந்திருக்காது. இத்தனை உயிர்களும் இழந்திருக்காது. 2004 முதல்
2009 பாரியயுத்தம் நடக்கும்வரை 883பேர் கொல்லப்பட்டார்கள். 1678பேர்
காயப்பட்டார்கள். 84பேர் காணாமல்போயிருந்தார்கள். ஒற்றுமைப்பட்டிருந்தால்
இதெல்லாம் நடந்திருக்குமா?

தமிழ்;த்தேசியக்கூட்டமைப்பு புலிகளால் உருவாக்கப்பட்டதல்ல. அதன்; முதல்
தலைவர் நானே. இது புலிகளால் உருவாக்கப்பட்டது என
பூச்சாண்டிகாட்டிவருகின்றார்கள்.

நான் இனத்துவேசம் பேசுபவனல்ல. பொய் பேசுபவனல்ல. யதார்த்தவாதி. அதுதான்
அவர்களுக்குக் கசக்கிறது.
இப்பவும் கூறுகிறேன் த.தே.கூட்டமைப்போ என்னவோ தமிழர்
ஒற்றுமைப்படாவிட்டால் தமிழ்மக்களை யாராலும் காப்பாற்றமுடியாது என்றார்.