கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் பொன்னாச்சிகுடி மக்கள் நடாத்திய சிவவிழா

0
396

கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில், பொன்னாச்சிகுடி மக்கள் நடர்த்திய சிவவிழா நேற்று(21) வியாழக்கிழமை இரவு இடம்பெற்றது.

கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலய வருடாந்த மகோற்சவம், கடந்த 11.09.2018ம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி, ஆலயத்திருவிழாக்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வந்த நிலையில், வியாழக்கிழமை(21) இரவு தொடக்கம் குடித்திருவிழாக்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. குடித்திருவிழா காலங்களில் கொடித்தம்ப பூசை, வசந்தமண்ட பூசை, சுவாமி உள்வீதி, வெளிவீதி வலம் வருதல் போன்றனவும் நடைபெறவுள்ளன.

பூசைகள் அனைத்தும் மு.கு.சச்சிதானந்தக்குருக்கள் தலைமையிலான குழுவினரால் நடாத்தப்படுவதுடன், எதிர்வரும் 30.09.2018ம் திகதி தேரோட்டமும், அன்றிரவு திருவேட்டையும், மறுநாள் காலை(01.09.2018) தீர்த்தோற்சவமும் நடைபெற்று ஆலய மகோற்சவம் நிறைவுபெறவுள்ளது.