மிருக பலி பூஜையை தடுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை

0
321

பழைமை வாய்ந்த மத சம்பிரதாயங்கள் என்ற ரீதியில் கருதப்படும் மிருகப்பலி பூஜை இன்னும் சில கோயில்களில் பகிரங்கமாக மேற்கொள்ளப்படுகின்றது.

இருப்பினும் பெரும்பாலான இந்து பக்தர்கள் இதில் உடன்படவில்லை என்பது தெரிய வந்துள்ளது.

தற்போது இந்து ஆலயங்களில் மிருகப்பலி பூஜை வழிபாடு நடப்படுவதற்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக இலங்கை ஆலயங்களில் அல்லது அதன் எல்லைப் பகுதிக்குள் மேற்கொள்ளப்படும் மிருக மற்றும் பறவை பலிப்பூஜையை தடை செய்வதற்கான சட்டத்;;;தை நடைமுறைப்படுத்துவதற்கும் இதற்காக தயாரிக்கப்பட்டுள்ள திருத்த சட்ட மூலத்தின் அடிப்படையில் பொருத்தமான திருத்த சட்டத்தை தயாரிக்குமாறு திருத்த சட்ட மூலம் தயாரிப்புக்கு ஆலோசனை வழங்குவதற்காக மீள்குடியமர்வு புனர்வாழ்வு வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் டி. எம். சுவாமிநாதன் அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.