சவளக்கடை பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஆசிரியர் பலி.மனைவி படுகாயம்.

0
2462

க. விஜயரெத்தினம்)
சவளைக்கடை பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெரியநீலாவணை கிராமத்தை சேர்ந்த ஆசிரியர் ஒருவர் ஸ்தலத்தில் உயிரிழந்துள்ளார்.அவரது மனைவியும் படுகாயமடைந்து கல்முனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் இன்று திங்கட்கிழமை(10.9.2018) காலை 7.15 மணியளவில் சவளைக்கடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிட்டங்கி-சவளைக்கடை பிரதான வீதியில் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவத்தில் பெரியநீலாவணை முதலாம் குறிச்சியை சேர்ந்த ஞானமுத்து -ஜெயந்தசீலன்(வயது-41)எனும் ஆசிரியரே இவ்வாறு  ஸ்தலத்தில் உயிரிழந்துள்ளார்.தனது சொந்தவூரான பெரியநீலாவணை கிராமத்தில் இருந்து கிட்டங்கி வீதியின் ஊடாக மண்டூர் மகாவித்தியாலயத்திற்கு கடமைக்கு தனது மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்துள்ளார்.இதன்போது எதிரே வந்தே பயணிகள் போக்குவரத்து பஸ் இவரை மிதித்து சென்றுள்ளது.இதன்போது ஆசிரியர் ஸ்தலத்தில் உயிரிழந்துள்ளதுடன் தனது மனைவியான ஆசிரியையும் காயமடைந்துள்ளார்.இவ்வாறு உயிரிழந்தவர் ஒரு பிள்ளையின் தந்தை ஆவார்.

காயமடைந்தவரையும்,உயிரிழந்தவரின் சடலத்தையும் பொலிசார் மீட்டெடுத்து கல்முனை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார்கள்.இது சம்பந்தமாக சவளைக்கடை பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.