வாழைச்சேனை கடதாசி ஆலையை உடனடியாக ஆரம்பிக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்தார் யோகேஸ்வரன் எம்.பி

0
163

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள வாழைச்சேனை தேசிய கடதாசி ஆலையை உடனடியாக ஆரம்பித்து தொழில் வாய்ப்பினை வழங்குமாறு ஜனாதிபதியிடம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற வடக்கு கிழக்கு அபிவிருத்தி தொடர்பான செயலணியில் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்த போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இக்கூட்டம் நடைபெறுவதற்கு சில நாட்களுக்கு முன்னர் மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான முன்மொழிவு அறிக்கையினை ஜனாதிபதிக்கு பாராளுமன்ற உறுப்பினர் சமர்ப்பித்து இருந்தார். இக்கூட்டத்தின் போதும் ஜனாதிபதி பாராளுமன்ற உறுப்பினரால் தமக்கு முன்மொழிப்பட்டு அனுப்பப்பட்ட அறிக்கையினை இக்கூட்டத்தில் சுட்டிக் காட்டினார்.

இவ்வேளை பாராளுமன்ற உறுப்பினரால் முன்மொழியப்பட்ட திட்டத்தில் வாழைச்சேனை தேசிய கடதாசி ஆலை உள்ளடக்கியுள்ளதை ஜனாதிபதி சபையில் சுட்டிக்காட்டி. அதனை தமது நிகழ்ச்சி நிரலில் சேர்த்துள்ளமையையும் தெரிவித்தார் மேலும் இதுசார்பான கிழக்கு மாகாண ஆளுனர் கடதாசி கம்பனி காணியில் சில திட்டம் நடைமுறைப்படுத்த வேண்டி கோரிக்கையை அப்போது முன்வைத்தார்.

மேலும் பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் வாழைச்சேனை தேசிய கடதாசி ஆலை உடனடியாக ஆரம்பிக்கப்பட வேண்டுவதுடன் இதன் அவசிய தன்மை தொடர்பாகவும தெளிவாக ஜனாதிபதிக்கு சுட்டிக்காட்டியுள்ளதுடன், அத்தோடு இங்கு ஆயுட்கால உத்தரவாதத்துடன் இரு வொயிலர் இயந்திரம் இருப்பதையும், அத்தோடு இது திருத்தப்பட்டுள்ளதையும், இங்கு கோவை மட்டை உற்பத்தி செய்யக் கூடிய நிலை உள்ளதையும், முதலீட்டார்கள் இதற்கு முதலீடு செய்வதற்கு தயாராக உள்ளதையும், தன்னால் இதற்கான முதலீட்டார்களை பெற்றுத் தரமுடியும் என்பதையும், கடதாசி ஆலையை ஆரம்பிப்பதன் மூலம் ஆயிரக்கணக்கான இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்புக்களை வழங்க முடியும் என்றும் தெளிவாக எடுத்துக் கூறினார்@.

மேலும் இவ்விடயம் தொடர்பில் ஜனாதிபதி செயலணி குழு செயலாளர், கைத்தொழில் அமைச்சின் செயலாளர், முதலீட்டு சபையின் பணிப்பாளர் போன்றோருடன் நேரடியாக இவ்விடயமாக பேசியுள்ளார். இதேவேளை இக் கடதாசி ஆலை சார்பாக கடந்த வருடத்தில் சீனா, கொரியா, இந்தியா நாட்டின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடி வாழைச்சேனை தேசிய கடதாசி ஆலையை இயங்கி நடவடிக்கை எடுக்க முற்பட்ட போது நாட்டின் பிரதமரால் அனுமதி வழங்காமையால் இந்நடவடிக்கை தடைப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் வடக்கு கிழக்கு பகுதிகளில் பொலிஸார் மற்றும் படையினர் வசமுள்ள கல்வி சார் நிலையங்கள், பொதுமக்கள் இருப்பிடங்கள், அரச கட்டடங்கள் போன்றவற்றில் இருந்து இராணுவம் மற்றும் பொலிஸார் வெளியேற்ற வேண்டும். அந்த வகையில் மட்டக்களப்பில் கொக்கட்டிச்சோலை பொலிஸ் வசமுள்ள மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குச் சொந்தமான பட்டிப்பளை ஆசிரியர் மத்திய நிலையம், முறக்கொட்டான்சேனை ஆரம்ப கல்விக்கான பாடசாலை, குருக்கள்மடம் கலைவாணி வித்தியாலயக் கட்டிடம் போன்றன விரைவாக விடுவிக்கப்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இதனை விரைவாக நடைமுறைப்படுத்துவதாக ஜனாதிபதி இதன் போது உறுதியளித்திருந்தாh@.

அத்தோடு வாகரை பிரதேச செயலகம் முன்பு இயங்கிய பகுதி மற்றும் அதனை அண்டியுள்ள பகுதியில் இராணுவம் முகாம் உள்ளதாகவும், முன்பு மக்கள் வாழ்ந்தமைக்கான உறுதி மற்றும் ஒப்பங்கள் உள்ளதுடன், இராணுவ முகாமை அகற்றி மக்கள் காணியை மக்களுக்கு கையளிக்கும் வகையில் உடனடியாக இராணுவத்தினை வெளியேற்றி மக்களுக்கு காணியை வழங்குமாறு ஜனாதிபதியிடம் பாராளுமன்ற உறுப்பினர் கோரிக்கை முன்வைத்தார்.

வாகரை பிரதேச செயலாளர் பிரிவலுள்ள தோணிதாட்டமடு பகுதியில் மக்கள் வாழ்ந்த 14 வீடுகளை இராணுவம் ஆக்கிரமித்து இராணுவ முகாம் அமைத்துள்ளது. எனவே இராணுவத்தை அகற்றி வீடுகளை மக்களிடம் மீள கையளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். எனவும் ஜனாதிபதியை கேட்டுக்கொண்டார்.

அதுமட்டுமின்றி வட மாகாணத்தினை முன்னிலைப்படுத்தி நல்லாட்சி அரசாங்கம் அபிவிருத்தி செய்வது போன்று கிழக்கு மாகாணத்தினையும் வட மாகாணம் போன்று அபிவிருத்தி செய்ய நல்லாட்சி அரசாங்கம் முன்வர வேண்டும் என்ற கோரிக்கையையையும் முன்வைத்தார்

தொடர்ந்து மட்டக்களப்பு மாவட்டம் போதைப் பாவனை மூலம் 400 மில்லியனுக்குமேல் நிதி ஒரு மாதமளவில் செலவிடப்படுகின்றது. மட்டக்களப்பு மாவட்டத்தில் கிட்டத்தட்ட 20 மதுபானசாலைகள் இருக்க வேண்டிய நிலையில் இங்கு 67 மதுபானசாலைகள் மற்றும் உல்லாச விடுதிகளில் மேலும் மதுபானசாலைகள் இருப்பதாகவும், மட்டக்களப்பு மாவட்டம் வறுமையிலும், போதையிலும் முன்னிலையில் இருப்பதையும் கூறியதுடன், மதுபானசாலை பெருக்கத்தை குறைக்குமாறு வேண்டிக் கொண்டார்.

இதற்கு பதிலளித்த ஜனாதிபதி தனது ஆட்சிக் காலத்தில் மதுபானசாலைகள் ஆரம்பிக்க அனுமதி வழங்கப்படவில்லை என்றும், அவ்வாறு இருந்தால் உடனடியாக தான் தடுக்க நடவடிக்கை எடுப்பதாகவும் பாராளுமன்ற உறுப்பினரிடம் ஜனாதிபதி தெரிவித்தார்.

இவ்வேளை பாராளுமன்ற உறுப்பினரால் முன்மொழியப்பட்ட திட்டத்தில் சில விடயங்கள் ஜனாதிபதி செயலணி குழுவில் மூலம் ஏற்றுக் கொள்ளப்பட்டுஅவர்களால் வெளியிடப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டு வழங்கப்பட்டது. அதில் சில திட்டங்கள் அபிவிருத்திக்குஉடனடி அபிவிருத்தி மேற்கொள்ள நடவடிக்கையை ஜனாதிபதி எடுத்தது மகிழ்ச்சியளிப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.

நீண்டகாலமாக பொதுமக்களுக்கு பிரச்சனையாக உள்ள கிரான் பாலம் அமைப்பது தொடர்பில் இத்திட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. அத்துடன் கிரான் குடும்பிமலை வடமுனை வீதி 20 கிலோ மீற்றார் புனரமைப்பு செய்யவும் பாராளுமன்ற உறுப்பினரின் கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டு ஜனாதிபதி செயலணியினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது

மேலும் பாராளுமன்ற உறுப்பினரால் தேசிய நல்லிணக்க அமைச்சினால் நிதி ஒதுக்கப்பட்டு திட்டம் மேற்கொள்ளப்படாமல் உள்ள பங்குடாவெளி – நரிப்புல்தோட்டம், சந்திவெளி – திகிலிவெட்டை, கிரான் – புலிபாய்ந்தகல், மண்டூர் – குறுமண்வெளி, கிண்ணையடி -முருங்கன்தீவு போன்றவற்றிக்கான பாலங்களை உடனடியாக அமைக்கப்பட வேண்டும் என கோரிக்கை ஜனாதிபதியால் ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தமையும் குறிப்பிடதக்கதாகும்.

அத்தோடு பாராளுமன்ற உறுப்பினரால் முன்மொழியப்பட்ட திட்டத்தில் உள்ளடங்கப்பட்ட விடயங்களில் வாகரை – கட்டுமுறிவு, வாழைச்சேனை – நாசிவந்தீவு, அம்பிளாந்துறை- குருக்கள்மடம், சித்தாண்டி – ஈரளக்குளம், துறைநீலாவணை – மண்டூர் ஆகிய இடங்களில் பாலங்கள் புதிதாக அமைக்கப்பட வேண்டிய நடவடிக்கை சார்பான அறிக்கையையும் ஜனாதிபதியிடம் வழங்கியுள்ளார்

அத்தோடு வாழைச்சேனை புதுக்குடியிப்பு, கதிரவெளி, சித்தாண்டி, சந்திவெளி, பாலமீன்மடு, விளாவட்டவான், தேத்தாத்தீவு, திருப்பழுகாமம், அம்பிளாந்துறை, கிரான்குளம் ஆகிய இடங்களில் கலாசார நிலையம் அமைக்குமாறும், ரிதிதென்னை – ஓமடியாமடு வீதி, கதிரவெளி – கட்டுமுறிவு வீதி, வெலிக்கந்தை – வடமுனை வீதி, கிரிமிச்சை – ஓமடியாமடு வீதி போன்ற வீதிகள் புனரமைக்கப்பட வேண்டும் எனவும் அறிக்கை ஜனாதிபதியிடம் வழங்கி உள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் மலசலகூடம் 5000, மானிய அடிப்படையில் வீடுகள், 40000, கிணறு 2000, விவசாய கிணறுகள் 1000, யுத்த வலய வீடுகள் புனரமைப்பு 1500, யுத்தத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த சுயதொழில் வாய்ப்பு என்பவற்றை ஏற்படுத்தல் போன்ற திட்டங்களை பாராளுமன்ற உறுப்பினரால் ஜனாதிபதியிடம் சமர்பிக்கப்பட்டிருந்தது

மேலும் வாழைச்சேனை கும்புறுமூலையில் அச்சு கூட்டுத்தாபனம், முறக்கொட்டாஞ்சேனை தேவாபுரத்தில் அரிசி ஆலை, சித்தாண்டியில் பால் பண்ணை உற்பத்தி நிலையம் அமைத்தல். மண்டூர், கதிரவெளியில் ஓட்டுத் தொழிற்சாலை, வாகரை, களுவன்கேணி, வவுணதீவு, வெல்லாவெளியில் ஆடைத் தொழிற்சாலை என்பவற்றை அமைத்து வறிய மக்களுக்கு தொழில் வாய்ப்பை ஏற்படுத்துமாறும் ஜனாதிபதியிடம் பாராளுமன்ற உறுப்பினர் எழுத்து மூலம் வேண்டுகோள் விடுத்திருப்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.