மட்டக்களப்பில் விபத்து ஓய்வு பெற்றஆங்கில ஆசிரியர் பலி.

0
1049

மட்டக்களப்பு நாவற்குடா கத்தாவடிப்பிள்ளையார் ஆலயத்து முன் ஏற்பட்ட விபத்தில் நாவற்குடா படுகாட்டார் வீதியைச் சேர்ந்த  ஓய்வு பெற்றஆங்கில ஆசிரியர் கணபதிப்பிள்ளை விக்கினேஸ்வரா  என்பவர் மரணமடைந்துள்ளார்.

இச்சம்பவம் இன்று 31/08/2018 பிற்பகல் இடம்பெற்றது காத்தான்குடியில் இருந்து வந்த வாகனத்தில் யூ வளைவில் திரும்ப முற்பட்ட வேளையில் விபத்து ஏற்பட்டது. அண்மைக்காலமாக அவ்விடத்தில் பாரிய விபத்துக்கள் இடம்பெற்று மரணமடைந்த சம்பவங்களும் காயமடைந்த சம்பவங்களும் அதிகம் என பிரதேசமக்கள் தெரிவிக்கின்றனர்.