சட்டவிரோதமாக வெளிநாட்டிற்குச்செல்லும் பெண்களுக்கு எந்தவிதமான சமூகப்பாதுகாப்பும் கிடைக்கப்போவதில்லை

0
168

(பொன்ஆனந்தம்)

“சட்டவிரோதமாக வெளிநாட்டிற்குச்செல்லும் பெண்களுக்கு எந்தவிதமான சமூகப்பாதுகாப்பும் கிடைக்கப்போவதில்லை” இதனை மாதர்சங்கங்கள் பொது அமைப்புக்கள் பெண்களுக்கு தெளிவுபடுத்தவேண்டும் என மூதூர் பிரதேச செயலாளர் ஏ. தாகீர்.தெரிவித்தார்.

திருகோணமலை மூதூர்பிரதேச செயலாளர்பிரிவில் சட்டவிரோதமாக பெண்கள் பல தடைகளைத்தாண்டியும் சிறிய குழந்தைகளை விட்டு விட்டு வெளிநாட்டிற்கு செல்வதாக மூதூர் ஆலிம் நகர் மாதர்சங்க தலைவி தெரிவித்தார்.

இன்று மூதூர் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் மக்கள் குறைகேள் மன்றம் பிரதேச செயலாளர் தலமையில் நடைபெற்றது.இளைஞர் அபிவிருத்தி அகம் அமைப்பின் ஆhதரவுடன் இடம்பெற்ற இந்நிகழ்வில் மாதர்சங்க தலைவி இவ்விடயத்தை சுட்டிகாட்டியதுடன் இதனால் பெண்கள், குழந்தைகள் பல்வேறு வகையில் பாதிப்பதாக சுட்டிக்காட்டினார். அவ்வாறு செல்பவர்களை தடைசெய்யவேண்டும் என கேட்டுக்கொண்டார். இவ்வாறான கோரிக்கையை பலரும் முன்வைத்தனர்.இதற்கு பதிலளித்த பிரதேச செயலாளர் கிராம மட்ட அமைப்புக்கள், மற்றும் பல்வேறு தரப்பட்ட அதிகாரிகளும் இங்கு கலந்துகொண்டுள்ளீர்கள்.

பெண்கள் சட்டவிரோதமாக வெளிநாட்டிற்கு தொழில் நிமித்தம் செல்வதனால் எவ்வித சமூகபாதுகாப்பும் அவ்வர்களுக்கு கிடைக்கப்போவதில்லை.இவ்வாறான செயலை போலிமகவர்கள் செய்கின்றனர். பலர் சுற்றுலாவிசாவில் செல்கின்றனர்.அதனை நாம் தடுக்க முடியாது.

சட்டவிரோதமாக செல்லமுயற்சிக்கும் தகவல்கள் தெரிந்தால் உடன் எமக்கு தெரியப்படுத்துங்கள் நாம் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு அறிவிப்போம்.

அதுமட்டுமன்றி நீங்கள் கிராமமட்டத்தில் பொதுமக்களுக்கு இது குறித்து தெளிவு படுத்துதல் வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். இங்கு 180பேர்வரை கலந்துகொண்டதுடன் பல்வேறு திணைக்கள அதிகாரிகளும் பிரதேச செயலக சகல மட்ட அதிகாரிகளும் கலந்துகொண்டிருந்தனர். மனித உரிமைகள் ஆணைக்குளுவின் கல்முனைப்பிராந்திய இணைப்பாளர் நிகழ்வை இலகுபடுத்தியதுடன் மனித உரிமைகள் தொடர்பான அடிப்படைச்சட்டங்களையும் தெளிவு படுத்தினார்.

சம்பூரில் பலகுளங்கள் மக்களுக்கு சொந்தமான காணிகள் எடுக்கப்பட்டன. அவற்றில் பல இன்னும் விடுவிக்கப்படவில்லை. மாறாக நஸ்ர ஈடும் வழங்கப்படவில்லை.குடியேற்றப்பட்ட பல காணிகளுக்கு முறையான ஆவணங்கள் இன்னும் வழங்கப்படவில்லை. மணற்சேனை வைத்தியசாலைக்கு வைத்தியர் நியமிக்காமையினால் மக்கள் சிரமப்படுகின்றனர். காட்டு யானை யினால் மக்களின் வாழ்வாதாரம்கேள்விக்குறியாகியுள்ளன. சட்டவிரோத மண்ணகழ்வு தொடர்கின்றன. பெண்கள் தலமைதாங்கும்குடும்பங்களின் வாழ்வாதாரம்,வீட்டுப்பிரச்சனைகளுக்கு விஷேட கவனம் செலுத்தப்படவேண்டும் என பல்வேறு பிரச்சனைகளை பொதுமக்கள் முன்வைத்தனர்.

அகம் இணைப்பாளர் த. திலீப்குமார் தலமையில் இந்நிகழ்வு நடைபெற்றன. இங்கு கிராமங்களில் காணப்படும், காணி,வீடு, வாழ்வாதாரம் உள்ளிட்ட பல பிரச்சனைகளை பொதுமக்கள் முன்வைத்தனர்.