ஏறாவூர் அரபுக்கல்லூரி இறுதியாண்டு மாணவர்கள் 2பேர் நீரில் மூழ்கி வபாத்…

0
285

ஏறாவூர் அரபுக்கல்லூரி இறுதியாண்டு மாணவர்கள் 2பேர் நீரில் மூழ்கி வபாத்…

ரெதிதென்னை, ஜெயந்தியாவ குளத்தில் நண்பர்களுடன் தோனியில் சென்ற வேளை தோணி கவிழ்ந்ததில் இரு மாணவர்கள் நீரில் மூழ்கி மரணம் அடைந்த சம்பவம் சற்றுமுன் இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்த இரண்டு பேரும் ஏறாவூர் புன்னைக்குடா வீதியில் வைத்தியசாலைக்கு எதிரில் உள்ள மர்கஸ் மத்ரசாவில் இறுதியாண்டில் கல்விபயிலும் மாணவர்கள் ஆவர்.

மத்ரஸா விடுமுறை காலமென்பதால் நண்பர்களுடன் சென்றவேளையே குறித்த அனர்த்தம் நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஏறாவூர் ஸக்காத் கிராமத்தை சேர்ந்த ஷாகீர்,மற்றவர் மீராகேணி சாஜித் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

Mohamed Asmy