நாடக அரசியல் செய்பவன்  நானல்ல உன்னிச்சை மக்களுக்கு குடிநீர் வழங்க 30 மில்லியன்.ஞா.ஸ்ரீநேசன் எம்.பி.

0
1220

[மயூ ஆ.மலை] மட்டக்களப்பு மண்முனை மேற்கு பிரதேசத்தில் உன்னிச்சை குளத்தை அண்டிய கிராம மக்களுக்கு இதுவரை குடி நீர் வழங்கப்படவில்லை எனவே அக்கிராம மக்கள் அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டம் ஒன்றை 19.08.2018 அன்று மேற்கொள்ளவிருந்தனர்.இதை அறிந்த தமிழ் தேசியக்கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் அவ்விடம் நேரில் சென்று மக்களுடன் கலந்துரையாடினார்.

அங்கு கருத்து வெளியிட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேஷன் இந்த மாவட்டத்தில் குடிநீர் பிரச்சினைக்காக பாராளுமன்றத்தில் அதிகளவில் குரல் கொடுப்பவன் நான் மற்றைய ஒரு சில அரசியல் வாதிகளைப்போன்று நாடக அரசியல் செய்பவனும்  நானல்ல தற்போது உங்களுடைய குடி நீர் பிரச்சனைக்கான தீர்வுக்காக 30மில்லியன் ரூபாய் பணம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.எனவே வெண்ணெய் திரண்டு வருகின்ற வேளையில் தாழி உடைத்தல் போலில்லாமல்‍‌ இவ்வாறான ஆர்ப்பாட்டங்களை தவிர்த்து எங்களுடைய பிரச்சனைக்கான தீர்வை பெற்றுக்கொள்ள வேண்டும்.

அத்தோடு உன்னிச்சை விநாயகர் இளைஞர்கழகத்தின் வேண்டுகோளிற்கிணங்க பண்முகப்படுத்தப்பட்ட நிதியின் மூலம் விளையாட்டு உபகரணங்களை கொள்வனவு செய்வதற்காக நிதியுதவி செய்வதாகவும் தெரிவித்தார்.