திருமலையில் அமைச்சர் சரத்பொன்சேகாவிடம் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்த இரா.சம்பந்தன்.

0
472

பொன்ஆனந்தம்

திருகோணமலை மாவட்டத்தின் பல கிராமங்களில் வாழும் மக்கள் காட்டுயானைகளின் அச்சுறுத்தல் காரணமாக பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுக்கின்றனர். அவ்வாறு பாதிக்கப்படும் மக்களைப்பாதுகாக்க முறையான நடவடிக்கைஎடுக்க வேண்டும் என எதிர்கட்சித்தலைவர் இரா சம்பந்தன் வேண்டுகொள் விடுத்தார்..

இவ்வேண்டுகோளை திருகோணமலைக்கு வருகைதந்திருந்த அமைச்சர் பீல்மாஸ்ரர் சரத்பொன்சேகாவிடம் சம்பந்தன் விடுத்தார்.

இன்று காலை திருகோணமலை மாவட்ட செயலகத்தில் நடந்த வனவிலங்குகள் பாதூகாப்பு மற்றும் அவற்றால் ஏற்படும் பிரச்சனைகள் பற்றிய கூட்டத்திலேயே மேற்படி கோரிக்கையை விடுத்தார்.

அவர்மேலும் குறிப்பிடுகையில், கடந்தகாலங்களில் கிராமமக்கள் வனவிலங்குகளால் பெரிதும் பாதிக்கப்பட்டுவருகின்றனர்.குறிப்பாக இடம்பெயர்ந்த மக்கள் வாழும் கிராமங்களைச்சாரந்த மக்களே அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.

குச்சவெளி பிரதேச செலகபிரிவில் உள்ள தென்னமரவாடி .திரியாய்போன்ற கிராமங்களிலும்.திருகோணமலை பட்டணமும் சூழலும்பிரிவில் உள்ள வில்கம்விகாரை,கப்பல்துறை, கன்னியா மற்றும் சேருவில போன்ற பிரதேசங்களிலும் காட்டுயானைகளின் தாக்கம் அதிகமாகவுள்ளன.இதனால் பல மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

ஆகையால் மக்கள் தொடர்ந்தும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களது வாழ்வாதாரங்களைசெய்கை பண்ணமுடியாதுள்ளனர்.

எனவே இந்தப்பிரச்சனைக்கு முறையான தீர்வு காணப்படவேண்டும். குறிப்பாக யானைகளை தடுக்க யானைவேலிகள் வேகமாக பிரச்சனைகள் உள்ள இடங்களில் அமைக்கப்பட வேண்டும் எனவும் சம்பந்தன் இக்கூட்டத்தில் கோரிக்கைவிடுத்தார்.பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவிகள் விடயங்களிலும் கூடிய கவனமெடுக்கவேண்டியுள்ளது.விரைவில் மாவட்டத்தில் பாதிக்கப்படும் இடங்களில் யானைவேலிகளை அமைக்க அமைச்சு நிதிகளை ஒதுக்கி நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் கோரிக்கைவிடுத்தார்.

இதேவேளை இங்கு கருத்து வெளியட்ட திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச சபையின் தவிசாளர் டாக்டர்.ஜீ.ஞானகுணாளன் குறிப்பிடுகையில், திருகோணமலைக்கு அழகைத்தருவது நகரிலும் கோணேசர்கோயில் பகுதியிலும் வாழும் மான்களாகும். அவைமுறையாக பராமரிக்கப்படுவதில்லை. அதற்கான இடமும் இல்லை. இதனால் நகரில் கொட்டப்படும் மரக்கறிகழிவுகள் உள்ளிட்ட பலவற்றை அவை உண்கின்றன. இதனால் அவை பல பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்கின்றன.

எமது நாட்டின் அழகான இந்த மான்களைப்பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கான இடமும் ஒதுக்கப்படவேண்டும் எனவும் கோரிக்கiவிடுத்தார்.

இதற்கு பதிலளித்த சரத்பொன்சேகா குறிப்பிடுகையில்,நான் நாட்டின் யுத்தத்தை தலமைதாங்கி முடிவுக்கு கொண்டு வந்தேன். அதற்கான வசதிகளும் வளங்களும் இருந்தன. அதனால் அதனை செய்யமுடிந்தது. இந்த ப்பிரச்சனைகளையும் ஒருதேசியப்பிரச்சனையாக கருதி பல நடவடிக்கைகளை நாம் எடுத்து வருகின்றோம். எமது இந்த வனஜிவராசிகள் திணைக்களத்தில் போதுமான வளங்கள் இல்லலை.ஆளணிகளும் போதாது. அதிகாரிகள் சிலர் நல்ல முறையில் செயற்படுகின்றனர். சிலர் பணத்தைவேண்டிவிட்டு முறையற்று செயற்படுவதாகவும் எனக்கு தெரிவிக்கப்படுகின்றது. ஆகவே இந்த யானைத்தாக்கப்பிரச்சனையைத்தடுக்க யானைவேலியே ஒரு வழிமுறையாகும். தற்போதுள்ளமுறையிலும் சில தொழில்நுட்பப்பிரச்சனைகள் காணப்படுகின்றன. அவற்றைச்சீர்செய்து முறையான திட்டத்தை வகுத்து இதற்கான தீர்வை திணைக்களத்தின் சட்டதிட்டங்களுக்கமைவாக நாம் காண்போம்

மட்டுமன்றி சுமார் 3000 தொண்டர் உதவியாளர்களை நியமித்து யானைவேலி உள்ளிட்ட விடயங்களை பராமரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. மான்களின் பிரச்சனைகளைப்பொறுத்தவரை அவற்றிக்கான காணி குறைந்தது 25 ஏக்கராவது தேவைஏற்படும். அதற்கான முறையான இடம் மற்றும் திட்டங்கள் பற்றி ஆராயவேண்டியுள்ளது எனவும் பதிலளித்தார். எது எப்படியாகிலும் இந்த வருடம் முடிவதற்குள் தேசிய ரீதியில் யானைகளின் அச்சுறுத்தலுக்கு 90வீதமான முடிவுகள் எடுக்கப்படும் எனவும் குறிப்பட்ட அவர் இதற்கு பலரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்எனவும் குறிப்பிட்டார் இக்கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான அப்துல்லாமகுரூப், க.துரைரெட்ணசிங்கம், உள்ளிட்ட பல உயரதிகாரிகள்,பாதுகாப்பு அதிகாரிகளும் கலந்தகொண்டிருந்தனர்.