கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலய தேசமகாசபை பொதுக்கூட்டம்.

0
494

கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலய தேசமகா சபையின் பொதுக்கூட்டமானது, எதிர்வரும் 19.08.2018ம் திகதி ஞாயிற்றுக்கிழமை மு.ப.10.00மணிக்கு வண்ணக்கர் தலைவர் பூ.சுரேந்திரராசா தலைமையில் நடைபெறவுள்ளதாக சபையின் வண்ணக்கர் செயலாளர் இ.சாந்தலிங்கம் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில், தேரோட்ட மகோற்சவம் பற்றி ஆராய்தல், புதிய நிருவாக சபை உறுப்பினர்களை தேசமகா சபையில் அங்கீகரித்தல் போன்ற விடயங்கள் பற்றிய கலந்துரையாடலும் நடைபெறவுள்ளது.

இப்பொதுக்கூட்டத்திற்கு அனைத்து பொதுமக்களும் கலந்து கொண்டு கருத்துக்களையும், ஆலோசனைகளையும் முன்வைக்குமாறும் ஆலய பரிபாலனசபையினர் கேட்டுக்கொள்கின்றனர்.