தொண்டர்ஆசிரியர்களின் கோரிக்கை திருமலை மேல் நீதிமன்றம் விளக்கம் கோரியுள்ளது

0
364

;பொன்ஆனந்தம்

கிழக்கு மாகாண தொண்டராசிரிய நியமனத்தில் பட்டியலில் உள்ளடக்கப்படாத நிலையில் பாதிக்கப்பட்டதாக கருதப்படும் தொண்டராசிரியர்களின் கோரிக்கை தொடர்பாக ஆதரித்து விளக்கமளிக்குமாறு திருகோணமலை மாகாண மேல்நீதிமன்றம் கோரிக்கைவிடுத்துள்ளது.

தொண்டராசிரியர்கள் சார்பாக மேல் நீதிமன்றில் முன்வைக்கப்பட்டகோரிக்கை தொடர்பாக ஆராய்ந்த நீதிபதி இவ்விவகாரத்தை வரும் 03.09.2018 திகதிக்கு ஒத்திவைத்ததுடன், குறித்த கோரிக்கை தொடர்பாக ஆதரித்து விளகமளிக்கவும் பணித்துள்ளார்.

மேல்நீதிமன்ற நீதிபதி மா.இளம்செழியன் முன்நிலையில்  நேற்று தொண்டராசிரியர்களின் விவகாரம் எடுத்துக்கொள்ளப்பட்டபோதே நீதிபதி வழக்காளிகளுக்கு இவ்வறிவித்தலை விடுத்தார்.இவ்வழக்கில் பிரதி வாதிகளாக கிழக்குமாகாண ஆளுநர்,மற்றும் கல்வி அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட பலர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

தொண்டராசிரியர்கள் நான்குபேர் சார்பாக “தமக்கு இதுவரை நேர்முகப்பரிட்சைக்கு அழைக்க வில்லை.ஏலவே இருந்த பெயர்பட்டியலில் உள்ளடக்கப்பட்டிருந்த தமது பெயர்கள் அண்மையில் கிழக்கு மாகாண நிர்வாகத்தினால் வெளியிடப்பட்ட பட்டியலில் உள்ளடக்கப்பட்டிருக்க வில்லை.மாறாக பல புதியவர்கள் இணைக்கப்பட்டுள்ளனர்.அதற்காக எம்மால்மேற்கொள்ளப்பட்டமேன்முறையீட்டுக்கு பதில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை”.

இந்நிலையில் தற்போதைய பட்டியல் படி நியமனம் வழங்கப்பட்டால் தாம்பாதிக்கப்படுவோம் தமது பிரச்சனைக்கு தீர் வரும்வரை நியமனத்தை இடைநிறுத்திவைக்குமாறு கோரியே மேல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இவ்வழக்கை பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக திருகோணமலை “நீதிக்கும் மாற்றத்திற்குமான நிலயத்தின்” சட்டத்தரணிகள் தாக்கல் செய்திருந்தனர். இன்றைய தினம் பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக சட்டத்தரணி ச.தில்லைராசா ஆஜாராகியிருந்தார்.

கிழக்கு மாகாண சபை நிர்வாகம் இருந்தபோது 445பேருக்கு நியமனம் வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருந்தது. இதில் 411 தமிழ்பேசும் ஆசிரியர்களும் 19 சிங்கள மொளிமூல அசிரியர்களும் 15 தேசிய பாடசாலைக்கானதொண்டர் அசிரியர்களும் பட்டியல்படுத்தப்பட்டிருந்தனர்.

பின்னர் சபை கலைக்கப்பட்டதுடன் ஆளுநரின் தலமையிலான ஆட்சியில் கல்வி அமைச்சின் மாகாண செயலாளராக விருந்த திசாநாயக்கவின் காலத்தில் மேற் சொன்ன பட்டியலில் இருந்து மாகாணத்தின்; பட்டியலில் உள்ளீர்க்கப்பட்டிருந்த நூறுபேர்வரை அகற்றப்பட்டு, புதியவர்கள் சேர்க்கப்பட்டு பட்டியலின் எண்ணிக்கை 456 ஆக மாற்றப்பட்டிருந்தது.

அதன்பின்னர் தற்போதைய கல்வி அமைச்சின் செயலாளரான முத்து பண்டா பொறுப்பேற்ற பின்னர் மேலும் 111 பேர் உள்வாங்கப்பட்டு பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட தொண்டராசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆரம்ப பட்டியல்களில் தமது பெயர்கள் இருந்தபோதும் பின்னரான பட்டியல்களில் தமது பெயர்கள் உள்ளீர்க்கப்படவில்லை.இறுதியான பட்டியலின்படி நியமனங்கள் வழங்கப்படுமாகவிருந்தால் தாம்பாதிக்கபடலாம் என்பதுடன் நியமனம் தமக்கு கிடைக்காது எனவும் முறையி;டுகின்றனர்.

இதேவேளை ஏலவே இதுபோன்று இரண்டு பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் மேல்நீதிமன்றில் தொடர்ந்த வழக்கு கடந்த 02.08.2018 அன்று எடுத்துக்கொண்டபோது பிரதி வாதிகளுக்கு அறிவித்தல் அனுப்ப நிதிமன்றம் பணித்திருந்தது குறிப்பிடத்தக்கது.