வாழைச்சேனை இந்துக்கல்லூரியின் ஆசிரியரினால் எழுதப்பட்ட ‘இலங்கை வரலாறு’ நூல்; வெளியீடு

0
341

(ஜெ.ஜெய்ஷிகன்)

திருமதி.சிவகுரு ஜெயமாலினி இராமகிருஸ்ணனினால் எதப்பட்ட இலங்கை வரலாறு என்ற நூல் வாழைச்சேனை இந்துக்கல்லூரியின் பிரதான மண்டபத்தில் வெளியீடு செய்யும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.
கல்லூரியின் அதிபர் அ.ஜெயஜீவன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக கல்குடா வலயத்தின் வலயக்கல்விப் பணிப்பாளர் தினகரன் ரவி கலந்து கொண்டு புத்தகத்தை வெளியிட்டு வைத்தார்.

இந் நிகழ்வில் அதிதிகளாக கோறளைப்பற்றுக் கோட்டத்தின் கோட்டக்கல்விப் பணிப்பாளர் நாகலிங்கம் குணலிங்கம், இந்துக்கல்லூரியின் பாடசாலை அபிவிருத்திச் சங்க செயலாளர் கந்தசாமி ஜெகதீஸ்வரன், பழைய மாணவர் சங்கத்தின் செயலாளர் புவனராஜா சுதன் மற்றும் பழைய மாணவர்கள், பாடசாலையின் பிரதி அதிபர்கள், அயற் பாடசாலைகளின் அதிபர்கள் , ஆசிரியர்கள். மாணவர்கள், கல்வி சமூகத்தினர் எனப் பலரும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்திருந்தனர்.

மேள வாத்தியங்களுடன் அதிதிகள் வரவேற்கப்பட்டதுடன் பிரதம அதிதியால் இலங்கை வரலாறு நூல் வெளியிடப்பட்டது. தரம் 06 மாணவர்கள் தொடக்கம் உயர்தரம் வரையிலான மாணவர்களின் மேலதிக கற்றலுக்கான நூலாக இந் நூல் அமைந்திருப்பது பலராலும் பாராட்டப்பட்டது.