களுவாஞ்சிக்குடி நகர லயன்ஸ் கழகத்தின் தலைவராக ஆனந்தராஜா

0
213

களுவாஞ்சிகுடி நகர லயன் கழக கிளையின் 19 வது வருடத்திற்கான புதிய தலைவராக ந.ஆனந்தராசா அவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.2018 ஆம் ஆண்டிற்கான புதிய நிருவாக சபை தேர்வுக்கான பொதுக் கூட்டமானது முன்னாள் தலைவர் நல்லையா அவர்களின் இல்லத்தில் நடைபெற்றது இதன்போதே அவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

மேலும் கழகத்தின் செயலாளராக லலயன் பிரதாபன் பொருளாளராக லயன் ந.சஜ்ஜீவ் ஆகியோர் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்

எமது களுவாஞ்சிகுடி லயன் கழக கிளையின் ஊடாக நாங்கள் கடந்த காலங்களில் பல தரப்பட்ட சமூகநலன்புரி சேவைகளை முன்னெடுத்து வந்துள்ளோம். அதேபோன்று இம்முறையும் பலதரப்பட்ட திட்டங்களை எனது தலைமையின் கீழ் மிகவும் சிறப்பாக முன்னெடுக்கவுள்ளோம் என தலைவர் தனது கன்னியுரையில் தெரிவித்தார்.